பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 27, 2012
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஜனவரி 21, 2012
கண்டேன் குயிலை...
(இணையத்தில் எடுத்தது)
கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த குயில் தேடல் பதிவை படித்து விட்டு பலரும் நான் பார்த்தது குயில் அல்ல என குயில் குறித்த பல தகவல்களை அளித்திருந்தீர்கள். அதன் மூலம் குயில் படம் பார்க்க முடிந்தாலும், குயிலை பார்க்க முடியாத ஏக்கம் நெஞ்சுக்குள் கூடு கட்டி கூவிக் கொண்டே இருந்தது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்த குயில் தேடல் இடுகையை படித்து விட்டு வளர்மதி அக்கா தொலைபேசினார்கள். "குயிலை பாக்கணும்னா நம்ம வீட்டுக்கு வாங்க. தினமும் காலையில காக்கைக்கு வைக்கிற சாப்பாட குயிலும் வந்து சாப்பிடும். அதனால காலை வேளையில இங்க வந்தீங்கன்னா நீங்க குயில் பாக்கலாம்" நம்பிக்கை தந்த இந்த வார்த்தைகளே என்னை இறக்கை இல்லாமல் பறக்க செய்தது. இங்கே அவர்கள் வீடு குறித்து அவசியம் சொல்ல வேண்டும். கிண்டியில் டிபென்ஸ் காலணியில் உள்ள அவர்கள் வீட்டின் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களடர்ந்த பராமரிப்பில்லாத நிலம். பல வித பறவைகளும் சிறு விலங்குகளும் சர்வ சாதாரணமாக வளைய வரும் பிரதேசம். நரக சந்தடிகளுக்கு நடுவே ஒரு சொர்க்க பூமி. சென்னையில் அப்படி ஒரு வீடு ஏழு பிறவி புண்ணியம் செய்தவர்களுக்கு தான் வாய்க்கும்.
ஆனால் அரபிக் கடலோரம் பத்து நாள் நான் பயணம் போனதால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை. திரும்ப வந்ததும் பொங்கல் பண்டிகை களை கட்ட துவங்கி இருந்தது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான மாட்டுப் பொங்கலை ஏதாவது கிராமத்தில் கொண்டாடலாம் என புதுக்கருவாட்சி என்ற கிராமத்திற்கு எனது இருசக்கர தேர் ஏறி சென்றேன்.
விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கீழ்வாலை என்னும் இடத்திலிருந்து (கீழ்வாலையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் இன்றும் காணக் கிடைக்கிறது) வலப்புறம் நெடுந்தொலைவு உள் சென்றால் புதுக்கருவாட்சி வரும். போகும் வழி எங்கும் பசுமை, பாறை, குன்று என இயற்கை ஆட்சி செய்யும் இடம். மனிதர்கள் நடமாட்டம் அபூர்வமாக தென்படும் பகுதி. அந்த சாலையில்(!) சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தன் கிளை நீட்டி மறித்தபடி நின்றிருந்தது ஒரு ரௌடி மரம். அந்த கிளையை குனிந்து கடக்கும் சாத்தியம் குறித்து யோசித்துக் கொண்டே கிளையை கவனித்த நான், சத்தமின்றி வண்டியை நிறுத்தினேன். கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் கிளை. கிளையில் நான் பல காலமாக தேடி வந்த குயில். இவ்வளவு அருகில் குயிலை பார்ப்பேன் என கனவிலும் நான் நினைக்கவில்லை. கருப்பாக இருந்தாலும் குயில் மிகவும் அழகாக மைனா அளவுக்கு இருந்தது. (சின்ன குயிலா?). பல படங்களில் பார்த்திருந்தாலும் இது குயிலில்லாமல் வேறு ஏதோ பறவையாக இருக்கவும் வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகத்தில் அதன் குரல் கேட்க காத்திருந்தேன். நான் அசையவே இல்லை. அதுவும் தான்.
சிறிது நேர காத்திருப்பில், எனது தலைக்கவசத்தை நான் கழற்ற முனைந்த போது அது பறந்து அதே மரத்தின் வேறொரு கிளையில் அமர்ந்துக் கொண்டது. நான் இப்போது வசதியாக அமர்ந்து கொண்டு அதை கவனிக்கத் துவங்கினேன். சென்னை புத்தக கண்காட்சியில் பறவை பார்த்தல் என்றொரு புத்தகம் சுமைக்கு பயந்து வாங்காமல் வந்தது நினைவுக்கு வந்தது. சுமார் கால் மணி நேரம் கடந்தும் அது எந்தவிதமான சப்தமும் எழுப்பவில்லை. ஒருவேளை ஊமைக் குயிலாக இருக்குமோ என சந்தேகமும் வந்தது.
அதை கூவ செய்யும் விதமாக நான் அதைப் போலவே சீட்டி அடித்தேன். அது என்னை மதித்ததாகவே தெரியவில்லை. அசையாமல் எங்கேயோ அது பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தல் யாருக்காகவோ அது காத்திருப்பதாக தோன்றியது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பொறுமை இழந்து விடுவேன் எனும் சூழலில், அது பொறுமை இழந்தது. விருட்டென கிளம்பி பறக்க துவங்கியது. அதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் கூவிக் கொண்டே பறந்தது. மறுக்கவே வாய்ப்பில்லாமல் அது குயில் தான்.
அடடா... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளில்லா அந்த காட்டுப் பாதையில் எனது குதியாட்டத்தை எந்த மனிதனாவது பார்த்திருந்தால் என்னை மனநிலை சரியில்லாதவன் என மதிப்பிட்டிருப்பான்.
இடுகையிட்டது
ரசிகன்
நேரம்
3:03:00 PM
லேபிள்கள்:
இயற்கை...,
பயணம்...,
ரசித்த வாழ்கை...
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், நவம்பர் 21, 2011
குயில் தேடல்...
கடந்து போன வசந்த காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த குயிலின் குரல்,
எங்கிருந்தோ கூவும்
ஒற்றைக் குயில்
எதிரொலிக்கிறது
நீ இல்லாத
என் தனிமையின்
ஏக்கத்தை.
என என்னை கவிதை எழுத வைத்தது. பேருந்தில் அமர்ந்து கவிதையை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போது, வைரமுத்து "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?" என கேள்வியை எழுப்பினார். அட! அதானே, நாம இது வரை குயிலையே பார்த்ததில்லையே? என சுவாரசியம் பற்றி கொள்ள, குயில் தேட ஆரம்பித்தேன்.
கட்டிடக் காட்டில் குயிலை எங்கே போய் தேடுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்த போது, "நம்ம கூகுளாரை கேட்டால் என்ன?" என யோசனை மின்னலென தோன்றியது. படங்கள் பிரிவில் அவரை கேட்டால், கௌதாரி, காக்கை, கரிச்சான் குருவி, குயில் பாட்டு பாடிய பாரதி, சின்ன குயில் சித்ரா, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி என எதை எதையோ காட்ட, எனக்கு தலை சுற்றத் தொடங்கியது.
நண்பர் வெங்கடேசன் "வண்டலூர் ஜூ ல பார்க்கலாமேடா" என அருமையான ஒரு யோசனை சொன்னார். அதானே என ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் கேமரா சகிதம் ஆர்வத்துடன் கிளம்பினோம்.
வண்டலூரில், வெள்ளை நிறத்தில் மயில், மரம் ஏறும் கரடி (!), தங்க நிற சேவல் என எத்தனையோ விலங்குகள் இருந்தன. குயிலுக்கு கூண்டு மட்டும் இருந்தது. பெருத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.
சிதம்பரத்தில் இருக்கும் பறவை ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியத்தின் நினைவு வர, அவரிடம் தொலை பேசிக் கேட்ட போது, அவர் சொன்னார். "சொந்தமாக கூடு கட்டத் தெரியாத குயில், காகத்தின் கூட்டில் தனது முட்டைகளை இடும். இது தெரியாமல் குயில் குரலெடுத்து பாடும் வரை தன் குழந்தை என்றே காகம் குயிலை வளர்த்து வரும். குயிலில் ஆண் குயில் கருப்பாக காகம் போன்றும், கண்கள் சிவந்தும், பெண் குயில் கௌதாரி போல வரிகளுடனும் இருக்கும் என்றார். (கூகுளார் சரியாத்தான் காட்டி இருக்கார்)
குயிலை எங்கே பார்க்க முடியும் என்றேன் நான். வசந்த காலத்தின் காலை வேளையில் சென்னை மவுண்ட் ரோடில் கூட குயிலின் குரலை கேட்கலாம். ஆனால் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் என முடித்துக் கொண்டார். (அதனால தான் வைரமுத்து அப்படி கேட்டாரோ?)
அவர் அப்படி சொல்லி விட்டாலும் குயில் தேடல் மனதில் இருந்து அகலவில்லை. ஒருமுறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது, மதுராந்தகம் அருகே, நண்பர் சொன்ன அடையாளங்களோடு ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக, தட தடக்கும் ரயிலுக்கு அஞ்சாமல் தண்டவாளத்தின் சமீபத்திலேயே நின்றிருந்தது. உடனே ஆர்வ மிகுதியில் அவரை அழைத்து அடையாளம் சொன்னேன். "பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்ததா?" என கேட்டார். ஆமாம். ஒரு ஓடையின் ஓரமாகத் தான் நின்று கொண்டிருந்தது என்றேன். "அது நீர் காக்காங்க" என சொல்லி எனக்கு ஏமாற்றம் தந்தார்.
தேடி சலித்து கிட்ட தட்ட குயிலை மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு வசந்த காலம் வந்ததும், குயில் தனது இனிய குரலால் தன்னை எனக்கு நினைவு "படுத்தியது".
கருப்பாக எந்த பறவையை பார்த்தாலும் இது குயிலாக இருக்குமோ? என யோசிக்கும் அளவிற்கு குயில் என்னை தேட வைத்தது. இந்த சூழலில் நண்பர் சீனுவாசன் தனது வீட்டுக்கு நண்பர்கள் எங்களை - ஒன்று கூடல் - விருந்துக்கு அழைக்க, நாங்கள் சென்று விருந்தை சிறப்பித்தோம். உண்டு முடித்து, பாடிக் களித்து, விளையாடி மகிழ்ந்து வீடு திரும்ப வெளியே வந்த போது, கொஞ்சம் தூரத்தில் முள் புதரில், கருப்பாய் ஒரு பறவை. குயிலா? என விழித்துக் கொண்டிருக்கும் என் மனம் கேட்க, உடனே கையிலிருந்த கேமராவால் ஒரு மின் படம் எடுத்தேன்.
அடுத்த படம் எடுக்க எத்தனிக்கும் போது அது காணாமல் போயிருந்தது. நண்பர் பாலசுப்ரமணியத்திடம் கேட்ட போது சொன்னார். சாட்சாத் அது குயிலே தான்.
அது குயிலே தான் என அவர் சொன்ன வார்த்தையே, குயிலின் குரலாய் என் காதில் தேன் பாய்ச்சியது. அப்புறமென்ன என் ஓராண்டு கால தவம் இனிதே நிறைவடைந்தது. இப்போது நினைத்தாலும் குயில் குதுகலம் தருகிறது.
நன்றிகள்: குயில் குறித்து நிறைய சொன்ன நண்பர் பாலசுப்ரமணித்திற்கும், விருந்து வைத்து குயில் பார்க்க வகை செய்த நண்பர் சங்கீதா சீனுவாசனுக்கும்.

10:59:00 PM
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, ஜூலை 09, 2011
நெல்லையப்பர் கோவில்!!!
உலகில் அழகான பெண் யார் என கேட்டால் பெரும்பாலும் ரதி என்போம். ஆனால் அழகி ரதியா? மதியா? என்றால் நான் மதி என்றுதான் சொல்வேன்.
சமீபத்தில் பணி நிமித்தம் திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. அப்போது நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றேன். எனது அந்த அனுபவம் இந்த இடுகையில்...
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப் பட்ட எழில் கொஞ்சும் சிற்பங்கள் பல உள்ள அற்புதமான கோவில்.
இதோ, மேலே உள்ள படத்தை பாருங்கள். அர்ஜுனனோடு சண்டையிட்ட சிவனின் சிற்பம். கோவில் உள்ளே நுழையும் போது, கொடி மரத்தை தாண்டியதும் உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றில் இருக்கும் சிற்பம். இந்த சிற்பத்தின் எழில் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதாது.
கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன். அர்ஜுனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாக சிற்பி, சிவனை இப்படி முறுக்கி கொண்டு நிற்க வைத்திருப்பாரோ!?!
நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்த சிற்பம் - தூணோடு சேர்த்து - ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின் படி இந்த சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். அதை சமாளிக்கும் விதமாக தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது.
நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்கு செங்குத்தாக தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது. (மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்து செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும்.
மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தை சொல்லுகின்றன. காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனை விட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும் படைத்திருக்கிறார் சிற்பி.
இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன. குறிப்பாக காந்திமதி அம்மன். சுமார் 25 நிமிடங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றேன். அப்படி ஒரு வசீகரம். அந்த முகம் காந்தம் போல ஈர்த்தது நிஜம். (மதி வதனம் காந்தமாக ஈர்ப்பதால் தான் காந்திமதியோ?) (இங்கு ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். "நேரமாச்சு கிளம்புங்க" என அங்கிருந்த யாரும் சொல்லவில்லை.)
ஒரு தூணின் இடை பகுதியை மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சிறு தூண்களாக பகுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சப்தம் வரும்படி செதுக்கி இருக்கிறார்கள். இதுவே ஆச்சரியமான விஷயம் தான். மேலும் ஆச்சரியம் தரும் படி, இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்த சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்த பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப் படவில்லையோ என சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை. (ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.)
பக்தியோ, கலை ஆர்வமோ, மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத காவியத்தை கற்களில் வடித்த சிற்பிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
குறிப்பு: ரதியும் அழகானவள் தான். ஆனால் முருகன் சன்னதியில் இருக்கும் ஒரு தூணில் மன்மதனோடு காட்சி தரும் ரதியின் மூக்கை எந்த முண்டகலப்பையோ உடைத்திருக்கிறான். அதனால் அவள் அழகு குறைந்து காணப்படுகிறாள். (காந்திமதியை விட நீ அழகு கம்மி தான் என சிற்பியிடமே ரதி மூக்குடைபட்டிருப்பாளோ?)

7:50:00 AM
லேபிள்கள்:
பயணம்...
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)