ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பிலேயே ஒரு (அழகிய) முரண் இருப்பதாக தோன்றுகிறது. பெண் ஆணிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதாக ஆண் கருதுகிறான். பெண் தன் விருப்பபடி ஆணை சம்மதிக்க செய்யும் சாமர்த்தியம் அவனுக்கு இல்லாததால் ஒருவேளை அப்படி தோன்றலாம். அதனால் அவன் தன் விருப்பங்களின் நியாயங்களை பெண்ணுக்கு புரிய வைக்க இயலாமல், பிரச்சினையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லுகிறான். அது பொய் என தெரிய வரும் போது பெண் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள். அவன் மேல் கோபம் கொள்கிறாள். இங்கே பிரச்சினை பொய் சொன்னதா, அல்லது புரிந்து கொள்ள விரும்பாத பிடிவாதத்தில் பெண் இருப்பதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனாலும் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ வேண்டிய வாய்ப்பு இருவருக்குமான, சகித்து கொள்ளும் மன நிலையால் சாத்தியமாகி தான் இருக்கிறது.
(பார்த்தாலே பரவசம் படத்தின் அழகே சுகமா... பாடல் கேட்ட போது தோன்றியது.)