வெள்ளி, டிசம்பர் 31, 2010

அழகே சுகமா..




ணுக்கும் பெண்ணுக்கும் இயல்பிலேயே ஒரு (அழகிய) முரண் இருப்பதாக தோன்றுகிறது. பெண் ஆணிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதாக ஆண் கருதுகிறான். பெண் தன்  விருப்பபடி ஆணை சம்மதிக்க செய்யும் சாமர்த்தியம் அவனுக்கு இல்லாததால் ஒருவேளை அப்படி தோன்றலாம். அதனால் அவன் தன் விருப்பங்களின் நியாயங்களை பெண்ணுக்கு புரிய வைக்க இயலாமல், பிரச்சினையிலிருந்து தப்பிக்க பொய் சொல்லுகிறான். அது பொய் என தெரிய வரும் போது பெண் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறாள். அவன் மேல் கோபம் கொள்கிறாள். இங்கே பிரச்சினை பொய் சொன்னதா, அல்லது புரிந்து கொள்ள விரும்பாத பிடிவாதத்தில் பெண் இருப்பதா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஆனாலும் ஆணும் பெண்ணும் இணைந்தே வாழ வேண்டிய வாய்ப்பு இருவருக்குமான, சகித்து கொள்ளும் மன நிலையால் சாத்தியமாகி தான் இருக்கிறது.

(பார்த்தாலே பரவசம் படத்தின் அழகே சுகமா... பாடல் கேட்ட போது தோன்றியது.)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

முரண்களால் நிறைந்ததே வாழ்க்கை நண்பனே ..
ஆண் இயல்பிலேயே அகங்காரம் நிறைந்தவன்..
பெண்ணோ மென்மையும் அன்பும் நிறைந்தவள்..
இரண்டும் இணைந்ததே முழுமை
முரண்கள் நிறைந்த இரு பாதிகளை
இணைக்கும் பாலமே காதல்
பெண்மை ஆணுக்குள் ஊடுருவ அவன் முழுமை அடைகிறான்
ஆண்மையின் சுதந்திரமும் கம்பீரமும் சற்றே கலக்க பெண் முழுமை அடைகிறாள்
இதை அறிந்து கொள்ள முடியாமல்
வெறும் உணர்ச்சிகளின் வடிகாலாய் மட்டும்
ஒரு உறவு பயன்படுத்தப்படும்போதோ
அல்லது உறவின் அர்த்தம் அறியாமல்
சுயநலம் மட்டும் தலை தூக்க
எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள் நிறையும்போதோ
புரிதல் என்பதே எட்டா கனியாய் போகிறது
விட்டுக்கொடுத்தலை சொல்லிதருவதே காதல்
தன்னை இழந்தவர்கள் மட்டுமே காதலை பெற முடியும்

shanevel சொன்னது… [Reply]

ஒரு பாடல் கருத்தினை ஏதாவது சிந்திக்க தூண்டும்படி வெளிவருவதே அரிதான இக்காலத்தில், சில பாடல்களாவது சில அரிய சிந்தனைகளைத் தூண்டும்.. ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்வதை இன்னும் இனிமையாக்கும்... நல்ல சிந்தனை... புதிய வருடம் இன்னும் மேன்மைகளை உனக்கு ஏற்படுத்தட்டும், வாழ்த்துக்கள்..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
அப்பாவாகும் தகுதி மட்டுமே
ஒரு ஆண்மகனுக்கு
அடையாளம் ஆகுமா? என்றாய்

உண்மைதான்
இத்தனை குறைகளோடு
என்னை சகித்துக்கொள்ள
எத்தனை பெரிய மனம் உனக்கு?

Related Posts Plugin for WordPress, Blogger...