வியாழன், பிப்ரவரி 24, 2011

குறியீடு...


சே,
சாக்ரடீஸ்,
கார்ல் மார்க்ஸ்,
திருவள்ளுவர்,
பெரியார்,
அரவிந்தர்,
ராமகிருஷ்ண பரமஹம்சர்
என எத்தனையோ பேர் 
இருக்க ஏனோ தேவதாஸ் 
மட்டுமே எல்லோருக்கும் 
நினைவுக்கு வருகிறார். 
புதிதாக தாடி வளர்பவனை பார்க்கும் போது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

K சொன்னது… [Reply]

ஏனெனில் தேவதாசும் தாடியும் காதல் தோல்வியின் அடையாளமாக இருப்பதால் ...............

VenSan சொன்னது… [Reply]

சே --> சே குவாரா? அல்லது அடச் "சே" ?
இரண்டும் பொருந்தும் வகையில்
இயற்றப்பட்டிருப்பதால்
இரு பொருள் இளவரசு
பட்டத்தை உமக்கு அளிக்கிறோம்..

மொழி மீதும்
சுதந்திரத்தின் மீதும்
சுயமரியாதையின் மீதும்
இறையின் மீதும்
காதல் கொள்வதை விட
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்வது
எளிதாகப்படுவதாலும்..
மற்றவையெல்லாம் மாதவத்தினால்அடைந்திட முடிந்திட
கொற்றவை மட்டுமே கற்றைவைஎல்லாம் முற்றவைத்தாலும்
முற்றிய தேகத்தை பற்றவைத்தாலும்
கிஞ்சித்தும் எட்டாமல்
அடைந்து அடையா உயிர் போலவும்
உடைந்து உடையா மனம் போலவும்
என்றும் விளங்குவதால்..
தேவதாஸ் மட்டுமே
எப்போதும் தாடிகளின்
தேவை தாஸ்

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியும்படி
ஆண்கள் தாடி வைக்கிறார்கள்!

அடடா
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியாதபடி
பெண்கள் மூடி வைக்கிறார்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...