செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒரு விஞ்ஞானி உருவாகிறான்!!!தன் காதலியின் இமைகள் வண்ணத்துபூச்சியை போல படபடத்ததில் தன் இதயத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து கேயாஸ் தன் தேற்றத்தை (CHAOS THEORY) எழுதி இருக்கலாம்.

தன்னவளின் விழி ஈர்ப்பு விசையிலிருந்து நியுட்டன் புவி ஈர்ப்பு விசையை அறிந்திருக்கலாம்.

தான் தந்த ஒற்றை ரோஜா தன் காதலியின் காதோரம் அமர்ந்து தன் காதலை சொன்னதிலிருந்து தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை ஜகதீஷ் சந்திர போஸ் உணர்ந்திருக்கலாம்.

தன்னவள் விரல் தொட்ட கணத்தில் தன்னுள் ஏற்பட்ட மின்னதிர்விலிருந்து மைக்கேல் பாரடே மின்சாரத்தை புரிந்திருக்கலாம்.

நானும் கூட காதலிக்கிறேன். நாளை நானும் விஞ்ஞானி ஆகலாம்!!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவைரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.


எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!


- நாவிஷ் செந்தில்குமார்

நன்றி: ஆனந்த விகடன் / 08 02 2012 இதழ்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...