செவ்வாய், ஜனவரி 31, 2012

நாணயம் - 2

ந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில், நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமிழில் நாணயம் வெளியிடாமல் தேவநாகரியில் வெளியிட்டதன் காரணம் புரியவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழில் வெளிவந்த நாணயங்களை தேடத் துவங்கியதன் விளைவு இந்த இடுகை. சங்க காலத்தில் வழக்கிலிருந்த "தமிழ் பிராமி" (நாம் தற்காலம் பயன்படுத்தும் தமிழின் முந்தைய வடிவம்) எழுத்துக்களை, எனக்கு அதன் மீது அறிமுகமோ பரிச்சயமோ இல்லாததால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு நன்கு புரியும் தமிழை மட்டுமே தேடி தொகுத்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என் பார்வைக்கு வராத, நான் இன்னும் அறியாத தமிழ் நாணயங்களை நீங்கள் ஏதேனும் அறிந்து இருந்தால் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.13 - 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் நல்லூர் பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் வெளியிட்ட காசு.


1469 - 1476 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமர கோலாகலன் (போரிடுவதை விழா போல கொண்டாடுபவன்) வெளியிட்ட நாணயம்.


விஜய நகர பேரரசுக்கு கப்பம் கட்டி காஞ்சிபுரம் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான பகுதிகளை 1487 - 1512 வரை ஆண்ட மன்னன் கோனேரிராயன் வெளியிட்ட நாணயம்.


கீழே இருப்பவை கிழக்கிந்திய கம்பெனியால் 1807 ஆம் ஆண்டு சென்னையில் அச்சடிக்கப் பட்ட நாணயங்கள்.

பத்து காசு 

இருபது காசு 

நாற்பது காசு 

இரண்டு பணம் 

கால் வராகன் 

அரை வராகன் 

இரண்டு வராகன் (தங்க காசு - எடை 6 கிராம்)


கீழே இருப்பது 1720களில் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் வெளியிடப்பட்ட நாணயங்கள்.

ஒரு துட்டு 

கோழிக்காசு 

இதெல்லாம் பழங்கால நாணயங்கள். தமிழ் நாணயங்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கல்ல. இலங்கையிலும் சிங்கப்பூரிலும்.
இலங்கை நாணயங்கள்


சிங்கப்பூர் நாணயங்கள்


இதர நாணயங்கள்:


தமிழீழ மீட்பு நிதிக்கென விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட தங்க காசு. (இது பொது புழக்கத்தில் விடப் படவில்லை)

இது அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியால் தன்னிச்சையாக பதிப்பிக்கப் பட்ட அதிகாரப்பூர்வமற்ற நாணயங்கள்.


குறிப்பு 1: 

போன இடுகையில் குறிப்பிடப்பட்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்து "ஸ்ரீ விஜயா" நாணயம் அச்சடிக்கப்பட்டது லண்டனில். 

கீழே இருப்பது தொண்டைமான் அரசரின் தர்பார். 1858 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.குறிப்பு 2 :

மேலே இருக்கும் அத்தனை படங்களும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை. 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 கருத்துகள்:

கோவை நேரம் சொன்னது… [Reply]

அரிய தகவல்கள் ..படத்துடன்

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

நல்ல முயற்சி வாழ்த்துகள். இவ்வளவுதகவல்கள் சேகரிக்க ரொம்பவே மெனக்கெட்டிருக்கிங்கன்னு புரியுது

shanevel சொன்னது… [Reply]

நாணயம் தொடர் அருமை... அதும் புகைப்படத்துடனும், விளக்கமாகவும் சொல்லிருக்கீங்க. படிப்பவர்களுக்கு புது தகவல்களாகவும், நாணயம் சேகரிப்போர் மத்தியில் ஒரு ஆர்வத்தையும் இத்தொடர் மீண்டும் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை... அருமையாக இருக்கிறது விசு!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

மிகவும் அரிய தகவல்கள் ! சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு ! வாழ்த்துக்கள் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

பெயரில்லா சொன்னது… [Reply]

நாணயம் தொடர் அருமை நண்பரே...படங்களுடன் விளக்கங்கள் நன்று ...தொடருங்கள் நண்பரே...

ரசிகன் சொன்னது… [Reply]

@கோவை நேரம் நன்றி நண்பரே... முதல் முறை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. உங்க வரவு நல் வரவாகட்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi ஆர்வத்தோட செய்யும் போது சிரமம் தெரியவில்லை அம்மா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

ரசிகன் சொன்னது… [Reply]

@shanevel நன்றி வேல். புதியவர்களுக்கு அறிமுகப் படுத்தும் விதமாக மென்மையாக தான் சொல்லுகிறேன். கடுமையான பகுதிகளை கையாளவில்லை. ஆனால் உங்களை போல நாணய சேகரிப்பில் ஆர்வமுடையவருக்கு இது கொஞ்சம் கம்மி தான்.

ரசிகன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன் சேமித்து வைத்து கொள்ள வேண்டிய விஷயம் நாணயம் / நா நயம் தான். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே.

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி உங்கள் உற்சாகம் என்னை இன்னும் இயங்க செய்யும். தொடரை இன்னும் சிறப்பாக அளிக்க முயற்சி செய்கிறேன் நண்பரே.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நாணய சேகரிப்புக்கு
நானும் உதவலாமென்றுதான்
அது பற்றி ஆவலாக கேட்டேன்!

அடடா
நீ சேகரிப்பது
புத்தம் புது ரூபாய் நோட்டுகள்
அதுவும் ஆயிரம் ரூபாய் தாள்கள்!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நாணய சேகரிப்புக்கு
நானும் உதவலாமென்றுதான்
அது பற்றி ஆவலாக கேட்டேன்!

அடடா
நீ சேகரிப்பது
புத்தம் புது ரூபாய் நோட்டுகள்
அதுவும் ஆயிரம் ரூபாய் தாள்கள்!

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது… [Reply]

அதீத உழைப்பு தெரிகிறது உங்கள் பதிவில். அரிதான விழயம் பற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

arul சொன்னது… [Reply]

miga miga arithana thagavalgalai thanthatharku nandri

Related Posts Plugin for WordPress, Blogger...