வெள்ளி, டிசம்பர் 30, 2011

நாணயம் - 1

முன்னுரைக்கு முன்னுரை:

வாழ்வே பேரானந்தம் இன்று தன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல வழிகளிலும் எனக்கு உற்சாகம் தந்து உதவிய அத்தனை நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.

முன்னுரை:

உளுந்தூர்பேட்டைக்கு பதினைந்து கிலோமீட்டர் அப்பால், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வந்து செல்லும், அதிகபட்சம் அறுபது குடும்பங்கள் வசித்த, மின்சாரம் இல்லாத கூவாடு எனும் பாரதிராஜா கிராமத்தில் எனது தாய் வழி பாட்டனார் சுற்றி இருந்த பல ஊர்களிலும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார். சுமார் 18ஆண்டுகளுக்கு முன் அவர் பூவுடல் நீத்த நாளில் ஊரெல்லாம் திரண்டு அழுது கொண்டிருக்க, பசி தாங்காத நான் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் வீடு முழுதும் தேடியும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வித்தியாசமான சில சில்லறை காசுகள் கிடைத்தன. அதை எடுத்துக் கொண்டு ஊரில் இருந்த ஒரே பெட்டி கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட போனவனுக்கு ஏமாற்றம். கடை பூட்டி இருந்தது. கடைக்காரரும் தாத்தாவுக்காக அழுது கொண்டிருந்தார். அப்புறம் தோட்டத்தில் கடலைக்காய் பறித்து சாப்பிட்டு பசி ஆறினேன்.

அந்த பிரிட்டீஷ் இந்திய சில்லறை காசுகளுடன் தொடங்கியது தான் எனது நாணயங்களுடனான சிநேகம். அது முதல் இன்றுவரை எல்லா வகையான  நாணயங்களையும் சேமித்து வருகிறேன்.

இது இந்திய நாணயங்கள் குறித்த ஒரு தொடர் பதிவு. ஆனால் நாணயங்களை Scan செய்து, செப்பனிட்டு எழுத வேண்டும் (கொஞ்சம் மெனக்கெட்டு உழைக்க வேண்டும்) என்பதால் தொடர்ச்சியாக எழுதுவேன் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் மாதத்திற்கு ஒன்றாவது எழுதிவிட முயல்கிறேன். இனி தொடர்...
                                                 *****************

உலகின் முதல் நாணயம் 

தி காலத்தில் பொருட்கள் பண்டமாற்று முறையிலேயே பரிமாறிக் கொள்ளப் பட்டன. இந்த பண்டமாற்று முறையில் பொருட்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பது சிரமமான விஷயமாயிருந்தது. அதே போல தேவையில்லாத பொருளையும் பண்ட மாற்றாக பெற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இது போல சில அசௌகரியங்கள் நாணயத்திற்கான தேவையை உண்டாக்கின.

உலகின் முதல் நாணயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் துருக்கியில் லிடியா என்ற இடத்தில் உருவாக்கப் பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் இந்தியாவிலும், கிரேக்கத்திலும் நாணயம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இந்தியாவில் திருவிதாங்கூர், குவாலியர், இந்தூர், ஜோத்பூர், கட்ச், மேவார், மைசூர், விஜயநகரம் உட்பட பல சமஸ்தானங்கள் பேரரசுகள் நாணயங்களை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நமது சேர, சோழ, பாண்டியர்கள் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.


திருவிதாங்கூர் சமஸ்தானம் 

இந்தூர் சமஸ்தானம்


16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவரை வீழ்த்திவிட்டு  புதுக்கோட்டையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார் ரகுநாத தொடைமான். அவரும் அவரது வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக செயல்பட , தனியாக நாணயம் வெளியிடுமளவிற்கு புதுக்கோட்டை சமஸ்தானதிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்திருந்தனர்.(கட்டபொம்முவை ஆங்கிலேயர்களிடம்  காட்டிக் கொடுத்து தங்கள் ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக தொண்டைமான்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.) சம காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரே நாணயம் இவர்கள் வெளியிட்ட, பொட்டு காசு என்று அழைக்கப் பட்ட "ஸ்ரீ விஜயா" என்று பொறிக்கப் பட்ட
புதுக்கோட்டை அம்மன் காசு தான்.

மேற்கண்ட நாணயத்திலிருந்து எனக்கு ஒரு விஷயம் புலப்படவில்லை. தமிழ் மன்னன் இராஜராஜன் தனது பெயரை தேவநாகரி மொழியிலும், தமிழக மன்னன் தொண்டைமான் தமிழல்லாத மொழியிலும் (அநேகமாக தெலுங்கு) நாணயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதியிலிருந்தே தமிழகத்தில் தமிழ் அகதியாகத் தான் இருக்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 கருத்துகள்:

ஷைலஜா சொன்னது… [Reply]

நாணயத்தகவல்கள் ரொம்ப அருமை..மெனக்கெட்டிருக்கிறிர்கள் இதுக்கு ..படங்கள் செய்தி எல்லாமே எனக்கு புதுசு சிறப்பும்கூட கடைசியா நீங்க கேட்ருக்கிறதுக்கு யாராவது பதில் சொல்வாங்க..
புத்தாண்டுவாழ்த்துகள் ரசிகன்!

pangusanthaieLearn சொன்னது… [Reply]

your blog is very informative.thanks
i also have posted a similar blog

http://pangusanthaielearn.blogspot.com/2011/12/blog-post_30.html

தங்கம் பழனி சொன்னது… [Reply]

நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது நன்றி.

Lakshmi சொன்னது… [Reply]

நாணயங்களில் எத்தனைவிதம். ஆச்சரியமான விஷயங்கள் தெரிதிராத விஷயங்கள் தெரிந்துகொல்ள முடிந்தது. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

suryajeeva சொன்னது… [Reply]

பண்டைய தமிழ் மொழி. அதான் சார் செம்மொழி... அது இன்று நாம் எழுதும் வடிவத்தில் இருந்ததில்லை என்றும்... தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது தான் ஏனைய இன்றைய தமிழ உட்பட திராவிட மொழிகள் என்பதும் எங்கோ படித்த நினைவு... நீங்கள் கோரியபடி யாராவது விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்களா என்று பார்ப்போம்

bala சொன்னது… [Reply]

happy birthday Vazlve peranandam

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா வாழ்த்துக்கு நன்றி அக்கா. புத்தாண்டு உங்களுக்கு நல்லபடியாக துவங்கி இருக்கும் என நம்புகிறேன்.

ரசிகன் சொன்னது… [Reply]

@pangusanthaieLearn அட! மிக நல்ல தகவல்கள். அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே.

ரசிகன் சொன்னது… [Reply]

@தங்கம் பழனி வணக்கம் நண்பரே. முதல் முறை வந்திருக்கிறீர்கள். உங்கள் வரவு நல் வரவாகட்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi வணக்கம்மா. "அட! இதெல்லாம் நாம பாத்தது தானே." அப்படின்னு நீங்க நினைக்கிற மாதிரி இன்னும் நிறைய ஆச்சரியம் இருக்கும்மா. வாழ்த்துக்கு நன்றிம்மா.

ரசிகன் சொன்னது… [Reply]

@suryajeeva வணக்கம் நண்பரே. நாணய சேகரிப்பில் நீங்கள் ஆர்வமுள்ளவர் என்பதை உங்கள் சுய விவர குறிப்பிலிருந்து அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். 1469 ஆண்டு மதுரை மண்ணில், சமரகோலாகலன் என்ற பாண்டிய மன்னன் தனது பெயரை தமிழில் பதித்து நாணயம் வெளியிட்டிருக்கிறார். மேலும் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் பிரெசிடென்சியில் வெளியிடப்பட்ட ஐந்து மற்றும் இருபது காசுகளிலும் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. யாரோ வெள்ளைக்காரன் நம் மொழியில் பணம் வெளியிடுகிறான். நம் மன்னன் என நாம் பெருமை கொள்ளும் மன்னர்கள் ஏன் அந்நிய மொழியை பயன்படுத்தினர் என்பது விளங்கவில்லை. தமிழகமெங்கும் பல கோவில்கள் எழுப்பி தன் கீர்த்தியை தமிழில் கல்வெட்டுகளாக பதித்த மாமன்னன் ராஜராஜன் நாணயத்தில் மட்டும் தேவநாகரியை பயன்படுத்தியது ஏன் என்பது புரியவில்லை. உண்மைக்கு உயிர் உண்டு. ஒரு நாள் விடை கிடைக்கும். பார்ப்போம்.

ரசிகன் சொன்னது… [Reply]

@bala நன்றி பாலா. முதல் முறை கருத்து சொல்லி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உன்னால் தான்
நாணயத்தை இழந்தேன்
என்றால் நம்ப மறுக்கிறாய்!

அடடா
நாளைக்கும் இப்படி
நடந்து விடாதபடிக்கு
பொத்தலை தைத்துக்கொடு!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு

ஹா... ஹா... ஹா...

பசங்க, "சார், லெட்டர் போடவா!" அப்படின்னு கேட்டுருப்பாங்களே!

Bharath Computers சொன்னது… [Reply]

நா-நயம் நன்றாக இருக்கு.

விமலன் சொன்னது… [Reply]

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Bharath Computers நன்றிகள் பல.

ரசிகன் சொன்னது… [Reply]

@விமலன் நன்றி விமலன். முதல் முறை கருத்து சொல்லி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

Related Posts Plugin for WordPress, Blogger...