வியாழன், மே 28, 2015

அம்மாக்களின் கதவுள்கள்...மாட்டை காட்டி 
ஊட்டிக் கொண்டிருந்த 
அம்மாவிடம் 
"மாத்துக்கு ஊத்து" என
பெருங்குரலெடுத்து 
அழுதது குழந்தை.

அன்பின் அடையாளம் 
அம்மா மட்டும் தானா !?!


ஞாயிறு, மார்ச் 24, 2013

கடவுளும்... கடவுளும்...
றைவனின் சன்னதியின்
அடர்ந்த மௌனத்தை
ஊடறுத்தது ஒரு
குழந்தையின்
குதூகலம்.

உருட்டும் விழிகளால்
குழந்தையை மிரட்டும் தாய்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடவுள் குழந்தையோடு
விளையாடுவதை.

வியாழன், பிப்ரவரி 14, 2013

நீயின்றி...
 நீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம்.
அது எழுத்து பிழை. உண்மையில்,
நீயின்றி அமையாது உலகு.


Related Posts Plugin for WordPress, Blogger...