செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவைரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.


எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!


- நாவிஷ் செந்தில்குமார்

நன்றி: ஆனந்த விகடன் / 08 02 2012 இதழ்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 கருத்துகள்:

Lakshmi சொன்னது… [Reply]

அருமையான கவிதை வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது… [Reply]

அது சரி நமக்கெங்கே புரியப்போகிறது...

Out of the box thinking...

நன்றி நண்பரே...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
மரத்தில் முற்றி விழுந்த பழங்கள்
சிறகுகள் முளைத்து பறந்த விதைகள்
விலங்குகள் தின்று துப்பிய கொட்டைகள்

அடடா
ஆற்றில் மிதந்து பயணித்த கனிகள்
பறவைகள் சுமந்து பிரசவித்த குழந்தைகள்
முளைத்து மூச்சுவிட அனுமதிக்காத மனிதர்கள்!

Lakshmi சொன்னது… [Reply]

ரசிகன் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்து பாருங்க. நன்றி

Vetrimagal சொன்னது… [Reply]

அழகாக, மனதில் தைக்கிறா மாதிரி சொல்லி , பசுமை எவ்வளவு அவசியம் என்று சிந்திக்க வைத்தீர்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi ரொம்ப நன்றிம்மா. வருகைக்கும், விருதுக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி நண்பரே, தலைப்பை கவனிக்க தவறி விட்டீர்கள் என நினைக்கிறேன்.

ஒரு பறவையின் வயிறு கடந்து வந்த விதை, செடியாகி மரமானதை ரசித்த பறவை, அது மரிப்பதை பார்க்கும் போது அரற்றத்தானே செய்யும்.

அன்பு பொதுவானால், நமது குழந்தையோ, மரமோ யாருக்கு துன்பம் என்றாலும் நமக்கு வலிக்குமல்லவா. ஆனால் பிற உயிரின் கதறல் நமக்கு எரிச்சல் தருகிறதென்றால் நம்மிடம் அன்பு இல்லை என்பது தானே பொருள்.

நாம் இயற்கையிலிருந்து விலகி விட்டோம் என்பதை உணர்த்தும் நான் மிக ரசித்த கவிதை இது.

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. நம்மால் நல்லது எதுவும் செய்ய முடிவதில்லை ஆனாலும் மனிதனே சிறந்தவன். மனிதனாயிருக்க வெட்கப் படுகிறேன்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Vetrimagal
வருக தோழி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

விமலன் சொன்னது… [Reply]

உண்மைதான்,பழம் உண்ட பறவைகள் எல்லாமுமாய் ஒரு மரத்தை ஊணி விட்டு செல்கிறது.அதைத்தான் நாம் வெட்டிவிடுகிறோமே?நல்ல மனம் வாழ்க/

Related Posts Plugin for WordPress, Blogger...