வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

அன்னா-விரதம்...நேகமாக ஆறாம் வகுப்பு படிக்கையில் என ஞாபகம். "அப்போ மட்டும் நான் இருந்திருந்தா வெள்ளைகாரங்களை உண்டிவில்லாலேயே அடிச்சு விரட்டி இருப்பேன்டா" நண்பர்கள் மாரிமுத்து மற்றும் தண்டபாணியிடம் பேசியது நினைவிருக்கிறது. அந்த ஆவல் இப்போது ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கும் அன்னாவிற்கு ஆதரவாக களமிறங்க செய்தது.

கடந்த 22 ம் தேதி  நான் சார்ந்துள்ள இயக்கம் சார்பாக விழுப்புரம் ஆட்சியரகம் எதிரில் வலிமையான லோக்பாலை வலியுறுத்தி  உண்ணாவிரதம் இருந்தோம். இதற்கு கிடைத்த ஆதரவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான நாங்களே எதிர்பாராதது. நாங்கள் அழைத்தவர்கள் மட்டுமல்லாது தானாகவே முன் வந்து பலர் கலந்து கொண்டனர்.

கணவனும் மனைவியுமாக சிலர் பங்கெடுத்தனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கூட்டி வந்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர், தன் கணவரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி இருவருமாக சிறிது நேரம் உட்கார்ந்து சென்றனர்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டு,  சுதந்திரப்போராட்ட தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் (95 வயது) புதுவையிலிருந்து வந்து கலந்துகொண்டதும், இதே நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளின் கூட்டத்திற்கு வந்த, இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட திரு. புண்ணியகோடி, மாற்று திறனாளிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் நெகிழ்ச்சி அளித்தது.

வலிமையான லோக்பால் நடைமுறைக்கு வந்துடும்ங்க. நம்பிக்கை இருக்கு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

Bharath Computers சொன்னது… [Reply]

அன்று-காங்கிரஸுடன்
இன்று-காங்கிரஸ்க்காக

shanevel சொன்னது… [Reply]

வலிமையான ஜன்லோக்பால் சட்டத்தை அரசு நிறைவேற்றி விட்டது. இது அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்திற்கு அவர் மட்டும் காரணமில்லை... ஆதரவளித்து உண்ணாவிரதத்தை மிகப்பெரிய போராட்டமாக மாற்றிய இந்திய தேச மக்களே காரணம்..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உண்டிவில்லை கொண்டு வா
மாங்காய் அடிக்கலாம்
என்றுதானே கூப்பிட்டாய்?

அடிப்பாவி!
இதென்னது?திடீரென்று
வலிக்குமா என்று கேட்டு
என்னை குறி வைக்கிறாய்?

Related Posts Plugin for WordPress, Blogger...