திங்கள், செப்டம்பர் 05, 2011

ஆசிரியர்களே... பெருமை கொள்ளுங்கள்!




லன் ஆக்டேவியன் ஹ்யும் என்ற  ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் நலனுக்காகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் திலகரின் வருகைக்கு பிறகு தான் முகம் மாற ஆரம்பித்தது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரசை போராட செய்தார். அவரது தலைமையில் காங்கிரஸ் செயல் பட்டு கொண்டிருந்த காலம். இதோ சுதந்திரம் கிடைக்கப் போகிறது என நாடே நம்பி கொண்டிருந்தது. அப்படி சுதந்திரம் கிடைத்தால், திலகர் தான் பிரதமர் என நாடெங்கும் பேச்சிருந்தது. இது குறித்து திலகரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு திலகர் சொன்ன பதில்... "பிரதமரா? நானா? ஒருக்காலும் இல்லை. நான் ஆசிரியன். என்னால் நூறு பிரதமர்களை உருவாக்க முடியும். இந்தியா சுதந்திரம் பெற்றதும் நான் எனது ஆசிரியப் பணிக்கு திரும்புவேன்."

பெருமை கொள்ளுங்கள் ஆசிரியர்களே... எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான பணியை செய்து கொண்டிருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.

தனி வகுப்பு எடுக்காமல், ஒழுக்கத்தில் மாணவர்களுக்கு உதாரணமாக விளங்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள்...

SURYAJEEVA சொன்னது… [Reply]

தனி வகுப்பு எடுக்காமல் இருக்கும் ஆசிரியர்கள்??????????????????????

ரசிகன் சொன்னது… [Reply]

# suryajeeva

தனி வகுப்பு - Tution - வகுப்பில் சரியாக பாடம் நடத்தினால் தனி வகுப்பிற்கு தேவை இருக்காதல்லவா?

F.NIHAZA சொன்னது… [Reply]

சரியாகச்சரி...

சில ஆசிரியர்கள்...பரீட்சை வினாக்களை
தமது டியூசனுக்கு வரும் மாணவர்களுக்கு மாத்திரம்
களவில் சொல்லிக்கொடுக்கிறார்களாம்...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

அன்பே
தனிவகுப்பு என்பதிலே
எனக்கும் உடன்பாடில்லை
ஆனாலும் அது உனக்கே தேவைதானோ?

ஒருவேளை
தனிவகுப்பை ஆங்கிலத்தில்
தவறின்றி எழுதி இருந்தால்
இப்படி உன்னை கேட்டிருக்க மாட்டேன்!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

tuition is the right spelling. not tution.o.k?

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு

வணக்கம் வாத்தியாரே...!

Related Posts Plugin for WordPress, Blogger...