வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காக்கும் இயற்கையை காப்போம்



ம்மா!

நமக்கு உணவளித்து
உறங்க இடம் தருபவள்.
நாம் அனுபவிக்கும் 
அத்தனை நலன்களுக்கும் 
அடிப்படை அவள்.

அவளுக்கு உடல் சுகவீனம் 
வரும்படி செய்தது அறிவீனம்.
அவளுக்கு உடல் தகிக்கிறது.
எனக்கு மனம் தவிக்கிறது.

வாகன பயன்பாட்டை 
வாய்ப்புள்ள போதெல்லாம் தவிர்த்தல்,
குளிரூட்டி, குளிர் பதனப் பெட்டி
பயன்படுத்தாமல் பொறுத்தல்,
மின் சாதன பயன்பாட்டை
முடிந்த வரை குறைத்தல்,
டீ கப், கேரி பேக்
பயன்பாட்டை வெறுத்தல்,
காய், கனிக்காகவாவது 
மரங்களை வளர்த்தல்
போன்றவை அவள்
சூட்டை தணிக்கும். நம்மை 
சுகப்பட வைக்கும்.

நன்றிகடனாக இல்லை என்றாலும்
எதிர்கால சந்ததியின் 
எதிர்காலம் கருதி 
காக்கும் இயற்கையை காப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

நான் தான் முதல்

இயற்க்கையைப் பற்றி கூறியதற்க்கு நன்றி

Unknown சொன்னது… [Reply]

சூழல் விழிப்புணர்வு ஆக்கத்துக்கு நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@வைரை சதிஷ்

@R.Elan.

நன்றி எதற்கு? இது நம் கடமை அல்லவா?

அம்பாளடியாள் சொன்னது… [Reply]

பூமித்தாயை பெற்ற தாய்க்கு இணையாக ஒப்பித்து
பொறுப்புடன் நம் கடமையை உணர்த்தி நிற்கும்
அழகிய கவிதைவரிகள் அருமை!...வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......................

Bharath Computers சொன்னது… [Reply]

I want to take an ice under the tree :P

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எப்போது பார்த்தாலும்
பூச்செடிகளோடுதானா?
அதற்கு என்னதான் வேண்டுமாம்?

வெடுக்கென கேட்டாய்
உன்னால் ஒலி,வலி,கண்ணீர்
தர முடியும்!
ஒளி,வளி,தண்ணீர் தர முடியுமா?

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு

கலக்கிட்டீங்க வாத்தியார்...

Related Posts Plugin for WordPress, Blogger...