வெள்ளி, அக்டோபர் 14, 2011

மா மழை போற்றுதும்...



பேருந்தின் 
ஜன்னலோரத்தில் நான்.

மேகம் கறுத்து 
என் தோளில் 
ஒரு துளி விழுந்த 
அதே நேரம் 
மண்ணிலும் ஒரு துளி. 
எது முதல் துளி?

வானில் 
பறவைக் கூட்டம் ஒன்று 
உற்சாக ஒலி எழுப்பி 
கடக்கிறது.

அவரைப் பந்தலின் கீழ் 
அண்ணி வயதொத்த பெண்ணுக்கு 
தலை சீவும் சிறுமி 
வானம் பார்த்து சிரிக்கிறாள்.

பேருந்தின் ஜன்னல்கள் 
பட படவென மூடப் படுகின்றன.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 கருத்துகள்:

அரவிந்த் குமார்.பா சொன்னது… [Reply]

மிகவும் அருமை.. நண்பரே..!!

ரசிகன் சொன்னது… [Reply]

@அரவிந்த் குமார்.பா
நன்றி நண்பா...

சம்பத்குமார் சொன்னது… [Reply]

அருமையான கவிதை நண்பரே..

நன்றியுடன்
சம்பத்குமார்

ரசிகன் சொன்னது… [Reply]

@சம்பத்குமார்
''மறக்காம" கருத்து சொன்னதுக்கு நன்றி சம்பத்... :p

நம்பிக்கைபாண்டியன் சொன்னது… [Reply]

கிராமத்து சாலையில் நடக்கும் போது மழைபெய்வது போல் உணரவைக்கிறது கவிதை.

ரசிகன் சொன்னது… [Reply]

@நம்பிக்கைபாண்டியன்
கிராமமும் மழையும் தங்கள் இயல்பு மாறாமல் இருக்கும் என நம்புவோம்.
கருத்துக்கு நன்றி பாண்டியன்.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
தூறலை அனுபவிக்காமல்
கதவடைத்து தூங்கியதற்காய்
வருத்தப்பட்டு நின்றேன்!

அடடா
குறுமரத்தை குலுக்கி
திடீர்மழை அனுபவம் தந்து
திகைக்க வைத்து விட்டாய்!

ஷைலஜா சொன்னது… [Reply]

சாரல்மழையாய் மனசை நனைக்கும் கவிதை

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் குழு இணைந்ததற்கும் நன்றிகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...