வெள்ளி, நவம்பர் 11, 2011

மூங்கில் காடுகளே...

நான் - காடு, மலை, நதி, அருவி, பரந்த சமவெளி, பள்ளத்தாக்கு என இயற்கை அன்னையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மனதை தொலைத்தவன். அத்தகைய இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவன். சாலையில் செல்கையில் என் கவனம் கலைக்க மாறுபட்ட ஒரு மரமோ, சிறு குருவியோ போதுமானது. இயற்கையின் அக்கறை, கனிவு குறித்தும், மனிதனின் சிறுமை குறித்தும் சிந்திப்பவன். இயற்கையின் பெருமைகளை கூறும் இந்த பாடல் எனக்கு மந்திரம் போல.

சாமுராய் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் குரலில்  வைரமுத்துவின் வைர வரிகளில் நாம் மிகவும் ரசித்த பாடல்...மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...                                   (மூங்கில்)

இயற்கை தாயின் மடியை பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து... பறந்து... பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறது.
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ....

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ                                        (மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது.
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக்கொள்கிறது.

மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...                                        (மூங்கில்)மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

மனதை வருடும் பாட்ல...

பகிர்வுக்கு நன்றி...

ராஜா MVS சொன்னது… [Reply]

என்னை பலநேரங்களில் புதிப்பிக்கும் பாடல்கலில் ஒன்று...

இந்த பாடலை திரையில் சிறை பிடித்த காட்சிகளும் மிக அருமை...

வீடியோ என் கணினியில் தடை... பார்க்கமுடியவில்லை நண்பா...

பெயரில்லா சொன்னது… [Reply]

One of my favorites too...

suryajeeva சொன்னது… [Reply]

பகிர்வுக்கு நன்றி

shanevel சொன்னது… [Reply]

பாட்டை எடுத்து போட்டதுக்கு நன்றி நண்பா... ஆனால் பாட்டை பற்றி எந்தெந்த இடத்தில் நீங்கள் வியப்புற்றது என்று விள்க்கி இருக்கலாம். இசை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பாட்டின் கருத்து மட்டும் பிடித்து விட்டது போல அமைந்திருக்கிறது உங்கள் வலைப்பதிவு... பெரிய பதிவாக போடுங்க!

Bharath Computers சொன்னது… [Reply]

மூங்கில்
இறந்தபின்பும்
சுவாசிக்கிறது,...
புல்லாங்குழல்.

ரசிகன் சொன்னது… [Reply]

@கவிதை வீதி... // சௌந்தர் //
@ரெவெரி
@suryajeeva

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

ரசிகன் சொன்னது… [Reply]

@ராஜா MVS
//என்னை பலநேரங்களில் புதிப்பிக்கும் பாடல்கலில் ஒன்று...//

மிக சரியாய் சொன்னீர்கள். நீங்களும் இந்த பாடலை அனுபவித்திருக்கிறீர்கள்.

நன்றி நண்பா, ரசித்ததற்கும், இணைத்ததற்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@shanevel
சரியாத்தான் கேட்டிருக்கீங்க. ஆனா, எனக்கு இசையை ரசிக்க மட்டுமே தெரியும். விளக்குமளவிற்கு விஷய ஞானம் இசையில் எனக்கில்லை. ஆனால் இசையும், பாடலை காட்சிப்படுத்திய விதமும் அருமை என ஒரு வரி சேர்த்திருக்கலாம் தான். சுட்டியதற்கு நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@Bharath Computers
//மூங்கில்
இறந்தபின்பும்
சுவாசிக்கிறது,...
புல்லாங்குழல்.//

அட! இதிலும் கூட இயற்கை தான் முன்னே.

ஷைலஜா சொன்னது… [Reply]

ரசிகன்...இன்றைய எனது மழலைகள் பதிவில் அது தொடர்பதிவு என்பதால் அடுத்து எழுத உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் விரைவில் அதைக்காண்க நன்றிமுன்கூட்டியே.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது… [Reply]

எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது நண்பா..

கேட்பது ஒரு சுவை
பார்ப்பது ஒரு சுகம்
படிப்பது ஒரு வகை!

அருமை..

விமலன் சொன்னது… [Reply]

மிக அருமையான பகிர்வு.மனிதமனம் கலைய இயறகை கரம் போது என்கிற தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே/

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
பூக்களை எதிர்பார்த்து
பூப்பறிக்க ஆசையாய்
பூந்தொட்டி நாடி சென்றேன்!

அடடா
வேர்களுக்கு நீர் விடாது
வெயிலில் வாட விட்டால்
வெறுந்தொட்டி தானே இருக்கும்?

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா நீங்கள் கேட்டுக் கொண்ட படி, தொடர்ந்திருக்கிறேன். நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@முனைவர்.இரா.குணசீலன் நன்றி தோழரே! வருகைக்கும், கருத்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@விமலன் வர வேண்டும், வர வேண்டும். முதல் முறை வருகை தந்துள்ளீர்கள். வணக்கங்கள்.

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.

இயற்கையிடமிருந்து பலனை அனுபவிக்கும், எதிர்பார்க்கும் மனிதன்; பதிலுக்கு இயற்கைக்கு எதுவுமே செய்வதில்லை.

மிக்க நன்றி. சரியான அலைவரிசையில் புரிந்து கொண்டு வெளிப் படுத்தியதற்கு.

Lakshmi சொன்னது… [Reply]

அழகான பாடலுக்கு நன்றி நானும் ஒரு பயண விரும்பி&இயற்கை விரும்பி. இதுபோல பாடலுடன் இன்னமும் சுகம்தான். பகிர்வுக்கு நன்றி

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi
//நானும் ஒரு பயண விரும்பி&இயற்கை விரும்பி.//

அப்படியானால் உங்கள் மனம் இன்னும் குழந்தையின் குதூகலத்தோடு தான் இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...