செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒரு விஞ்ஞானி உருவாகிறான்!!!



தன் காதலியின் இமைகள் வண்ணத்துபூச்சியை போல படபடத்ததில் தன் இதயத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து கேயாஸ் தன் தேற்றத்தை (CHAOS THEORY) எழுதி இருக்கலாம்.

தன்னவளின் விழி ஈர்ப்பு விசையிலிருந்து நியுட்டன் புவி ஈர்ப்பு விசையை அறிந்திருக்கலாம்.

தான் தந்த ஒற்றை ரோஜா தன் காதலியின் காதோரம் அமர்ந்து தன் காதலை சொன்னதிலிருந்து தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை ஜகதீஷ் சந்திர போஸ் உணர்ந்திருக்கலாம்.

தன்னவள் விரல் தொட்ட கணத்தில் தன்னுள் ஏற்பட்ட மின்னதிர்விலிருந்து மைக்கேல் பாரடே மின்சாரத்தை புரிந்திருக்கலாம்.

நானும் கூட காதலிக்கிறேன். நாளை நானும் விஞ்ஞானி ஆகலாம்!!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

10 கருத்துகள்:

கோகுல் சொன்னது… [Reply]

நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி(ஆகிடுவீங்க) பாஸ்!

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

விஞ்ஞானி ஆக இது ஒரு வழியா நல்லா இருக்கே.

மாலதி சொன்னது… [Reply]

விஞ்ஞானி ....விஞ்ஞானி ...

Bharath Computers சொன்னது… [Reply]

"WIN" ஞானி

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

ஆஹா.. எங்களுக்கு ஒரு விஞ்ஞானி கிடைத்து விட்டார்....

பார்த்து தலைவரே...
தேவதாஸிம் இந்த காதலில் இருந்துதான் வந்தார்...

பெயரில்லா சொன்னது… [Reply]

காதல் விஞ்ஞானி...-:)

வாழ்த்துக்கள்...

ரசிகன் சொன்னது… [Reply]

@கோகுல்
@Lakshmi
@மாலதி
@Bharath Computers
@கவிதை வீதி... // சௌந்தர் //
@ரெவெரி
ஹா ஹா... கருத்து சொன்ன அத்தனை காதலர்களுக்கும் நன்றி.

Radhakrishnan சொன்னது… [Reply]

கணேசா யாரடா காதலிக்கிற.. என்கிட்ட குட சொல்லல

vimalanperali சொன்னது… [Reply]

நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.
விஞ்ஞானிகள் கவிஞர்களாவதும்,கவிஞர்கள் விஞ்ஞானிகள் அவதும் வாடிக்கையாகிப்போகும் இது மாதிரி காதலர்கள் கை தொடும் போது/

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நினைத்து பார்க்கும்படி
உருப்படியான செயல்
வாழ்வில் செய்ததுண்டா?என்கிறாய்

அடடா
எப்போது நினைத்தாலும்
எனக்குள் பூத்துக்குலுங்கி
என்னை பரவசமாக்குதடி காதல்!

Related Posts Plugin for WordPress, Blogger...