சனி, ஆகஸ்ட் 27, 2011

என் விகடன்...

சுதந்திர தினத்தன்று அகரம் சித்தாமூர் என்ற கிராமத்தில் மரம் நட சென்ற போது நான் எடுத்த ஒரு மின் படத்தை  இதே வலைப்பூவில் சுதந்திர தினம் !?! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட எனது நண்பன் சௌந்தரராஜன், என்னை ஆச்சரியப் படுத்த எனக்கு தெரியாமல் விகடனுக்கு அனுப்ப, அது இந்த வார ஆனந்த விகடன் - என் விகடன் - புதுச்சேரி இதழில் ஸ்மைல் பிளீஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளது.



(படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)

அதில் தவறுதலாக நண்பன் சௌந்தரராஜன் பெயர் அச்சாகி இருந்தாலும், நல்ல தரமான மின்படம் எடுக்கிறேன் என்ற மன நிறைவை தந்ததற்காக நண்பனுக்கும், தரமான மின்படத்தை அச்சேற்றி உற்சாகம் தந்ததற்காக என் விகடனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் அவசியம் நன்றி சொல்ல வேண்டிய இன்னொருவர்  நண்பர் வெங்கடேசன். என் மீதும் நம்பிக்கை வைத்து Panasonic FZ100 Camera வாங்கிய அவருக்கும் எனது நன்றிகள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

super photos...congratulations!

shanevel சொன்னது… [Reply]

சொல்ல வேண்டிய செய்தி யார் சொன்னாலும் அது மக்களை சென்றடைந்தாலே மகிழ்ச்சி தானே நண்பா!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

குழந்தையிலிருந்தே தேடுகிறேன்
என்னை க்ளிக் க்ளிக் என்று
ஆடையின்றி எடுத்து தள்ளி விட்டான்
அந்த புகைப்படக் கலைஞன்!

என்னவளே எது எப்படியோ
உன்னை களுக் களுக் என்று
வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டான்
பிழைத்து போகட்டும் அவன்!

ரசிகன் சொன்னது… [Reply]

# shanevel

எனக்கு இப்படி அனுப்ப வேண்டும் என்ற எண்ணமே இல்லையே! அவன் அனுப்பாவிட்டால் இது பிரசுரமாகி இருக்காது. எனவே எனக்கு மகிழ்ச்சி தான்.

சௌந்தர் வேணுகோபால் சொன்னது… [Reply]

நான் படத்தினை அனுப்பும் போது எடுத்த இடம், எடுத்தவர் பெயர் அனைத்தையும் குறிப்பிட்டிருந்தேன். இது குறித்து ஆனந்த விடனில் இருந்து என்னை தொடர்பு கொண்டபோது வினவினேன். அவர்கள் அனுப்பியவர் பெயரை தான் பிரசுரிப்பார்களாம், எடுத்தவர் பெயர் வரவேண்டுமெனில் தனியாக மேற்கோளிட்டு காண்பிக்க வேண்டுமாம். இனி படங்களை அனுப்பினால் தனியே மேற்கோளிட்டு காண்பிக்கிறேன். நண்பர்கள் மன்னிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...