அமெரிக்காவில் பணியாற்றும் தம்பி ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, அதிகளவு இந்தியர்களை எதனால் அமெரிக்கா பணியமர்த்தி இருக்கிறது என நான் கேட்க, அதற்கு அவன் சொன்ன பதில்...
ராதா: ஒன்னே முக்கால மூனால பெருக்கினா எவ்வளவு சொல்லு?
நான்: அஞ்சே கால் டா. ஏன் கேக்கற?
ராதா: இங்க, ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போனேன். ஏழு டாலருக்கு பொருள் வாங்கினேன். கேஷியர் கிட்ட பத்து டாலர் நோட்டை கொடுத்துட்டு மீதி காசுக்காக நின்னேன். அவன் மும்முரமா எதையோ தேடிக்கிட்டிருந்தான். கொஞ்ச நேரம் பொறுத்து பாத்தும் அவன் தேடறத நிறுத்தல. மீதி காசும் தரல. நான் கடுப்பாகி அவன் கிட்ட "மீதி காசு குடு"ன்னு கேட்டேன். இரு, கால்குலேடரை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னான்.
நான்: அடப்பாவி!
ராதா: எனக்கு சிரிப்பு வந்தது. நான் அவன் கிட்ட பத்து விரலை காட்டி, "இதில ஏழு விரலை மடக்கினா, மீதி மூணு வருதா" அப்படின்னு நர்சரி வாத்தியார் மாதிரி பாடம் நடத்தினேன்.
நான்: ஸ்கூல்ல, அவன் படிச்சானா? படுத்து தூங்கினானாடா?
ராதா: மீதியையும் கேளு. பாடம் கேட்டுட்டு, நம்பிக்கை இல்லாமலா என்னன்னு தெரியல, "அது உன் கையில" அப்படின்னுட்டு, கால்குலேட்டரை தேட ஆரம்பிச்சுட்டான்.
நான்: ஹா!ஹா! எல்லார் கையிலயும் பத்து விரல் தானேடா இருக்கும். அது கூட தெரியாத மடையனா அவன்.
ராதா: இப்போ தெரியுதா, அமெரிக்காவில ஏன் இந்தியர்களுக்கு மவுசுன்னு.
நான்: இது மாதிரி ஆளுங்க இருக்கற வரைக்கும், இந்தியா ஒளிரும் டா.
17 கருத்துகள்:
நல்லா இருந்துச்சு ஜோக்...
ஆனா அங்க இருக்கிற ஒருத்தனுக்கு கொடுக்கிற சம்பளத்தில் மூணுல ஒரு பங்க நம்ம பயலுங்க கிட்ட கொடுத்தா போதும்... சங்கம் உரிமை எல்லாம் கேக்காம மாங்கு மாங்குன்னு வேளை செய்வாங்க.. அங்க அவன் எட்டு மணி நேரம் தான் வேளை செய்வேன்னு சொல்வான், நம்ம ஆளு பதினாலு மணி நேரம் ஜவ்வு மாதிரி இழுத்தாலும் கிழியாம வேளை பாப்பான்...
இந்த அளவுக்கு கணக்கு போடும் நம்மாளுங்க இந்த சம்பள விஷயத்த ஏன் கணக்கு போட மாட்டேங்கிறானுங்க..
ஏன் என்றால் அவன் இந்தியாவை விட அங்கு அதிகம் சம்பாதிப்பதால்...
இதுக்கு ஒரு பெரிய பதிவே போடலாம் தோழர்
அட...அப்படியா? என்று ஆச்சரியபட்டாலும்
கணிதமேதை ராமனுசம் இந்தியர்தானே...
இப்படித்தான் அமெரிக்காரர்கள் இருக்கிறார்களா...
என்ன ஒரு புத்திசாலிதனம்...
ஒரு வேளை அங்கே இருக்கவங்களுக்கு கையில விரல் அதிகமா இருக்குமோ?
சூர்ய ஜீவா சொல்வதுபோல தான் நானும் நினைக்கிரேன். எந்தவேலைன்னாலும் நம்மாளுங்க சின்சியரா பண்ணிடுவாங்க.
ஹா,ஹாமெரிக்கா
-:)
@suryajeeva
நீங்கள் சொல்வது மிகக் சரி தோழர். அதிகளவு திறமையும் நேர்மையும் இருக்கும் நம்மவர்கள் அங்கே கால் பங்கு ஊதியத்திற்கே வேலை பார்ப்பது, இங்கே அந்த அளவிற்கு சம்பளம் கிடைக்காததால் தான்.
அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக அமெரிக்கன் இந்தியா வந்து வேலை செய்யும் நாள் வரும். (மக்களின் அறியாமை ஒழிக்கப் பட்டால்)
@veedu
வணக்கம் ஐயா. முதன் முறை வந்திருக்கிறீர்கள். வருக வருக.
உண்மை. இந்தியா ஈன்ற எண்ணிலடங்கா மேதைகளில் குறிப்பிட தகுந்தவர்.
நன்றி. வருகைக்கும், கருத்துக்கும்.
@கோகுல்
அட! அப்படியும் இருக்கலாமோ? தனது கையில் இருக்கும் ஆறு விரல்களில் இருந்து கணக்கை கணிக்க தெரியாமலும் அவர் அப்படி சொல்லி இருக்கலாமோ? நல்லா தான் யோசிக்கிறீங்க.
வணக்கம். முதன் முறை வந்திருக்கிறீர்கள். வருக வருக.
@கவிதை வீதி... // சௌந்தர் //
@Lakshmi
@Bharath Computers
@ரெவெரி
நண்பர்களே! நன்றி. வருகைக்கும், கருத்துக்கும்.
ஹா... ஹ... ஹாஸ்யமான(வர்கள்) அமெரிக்கா.
அமெரிக்கர் களுக்கு கணக்கு தான் தெரியாது என்பது போல பதிவு இட்டிருக்கீங்க. கணக்கு என்பது அறிவியலின் தலைமை. கணக்கு என்பதை விட்டு, எந்த அறிவியற் பிரிவும் இருக்காது. அதாவது இயற்பியல், வேதியியல் போல..! அப்பேற்பட்ட கணக்கு விஷயத்தில் கோட்டை விடும் அமெரிக்கர்கள் இருக்கும் வரை, அங்கு இந்தியர்கள் பிழைத்துக்கொள்வார்கள்..!
@NIZAMUDEEN
முதன் முறை வந்திருக்கிறீர்கள். வர வேண்டும், வர வேண்டும்.
@shanevel
அமெரிக்கர்களுக்கு கணக்கு தெரியாது என பொதுவாக சொல்லி விட முடியாது. அவன் சந்தித்த மனிதர் அப்படி. அப்படி பட்டவர்கள் நம்மிடத்திலும் உண்டு.
எனது கல்லூரி ஆசிரியர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், சர்.சி.வி.ராமன் அவர்களின் மாணவர். 57 /246 போன்ற சிரமமான கணக்குகளையும் நாம் கால்குலேடேரில் போடுவதற்கு முன் கரும்பலகையில் எழுதி இருப்பார். அவரை ஒப்பிடும் போது நாமும் அந்த அமெரிக்கனை போன்றவர்கள் தானே?
என்னவளே
எப்படியோ கிடைக்கிறது
இலவசமாகவேணும்
உண்ணுவதற்கான சோறு!
அடடா
எத்தனை நாளைக்கு
எனத்தான் தெரியவில்லை
கரம்பாயிருக்கிறது களம்!
இது என்னக்கு நடந்த ஒரு நிகழ்ச்சி. இது போல பல அனுபவம் இருக்கிறது, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு என்பது போல இந்த நிகழ்வை அண்ணன் கணேசன் (விஸ்வநாதன்) உடன் பகிர்ந்தேன்.
கருத்துரையிடுக