திங்கள், டிசம்பர் 05, 2011

தமிழில் புகைப்படக்கலை - 2


ணக்கம் நண்பர்களே, குயில் தேடல் இடுகையில் நண்பர் சீனுவாசன் வீட்டில் கும்மாளம் அடித்ததை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது உங்கள் நினைவில் இருக்கலாம். அப்போது எடுத்த மின் படம் ஒன்றை,  "நண்பர்கள்" எனும் தலைப்பில் தமிழில் புகைப்படக்கலை (PIT) நடத்திய போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அந்த மின் படத்தை இரண்டாம் இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள் என்பதை படத்திலிருக்கும் அதே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்கள் (இடமிருந்து வலம்) :  HULK சௌந்தர், சந்தோஷ் (சந்தோஷமா இருக்கான் பாருங்க), டி-ஷர்ட் அணிந்திருப்பது மணி, கண்ணாடி அணிந்திருப்பது நான், எனக்கு எதிரில் செல்வம், எங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு கை மட்டும் தெரிகிறதே அது சீனுவாசன்.

இந்த படத்திலிருக்கும் நண்பர்களின் மகிழ்ச்சியை, விளையாட்டை, அது எடுக்கப்பட்ட அந்த கணத்தை பாராட்டி மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்த கிரேஸ், கங்கா, புனிதவதி, கோகிலா, சங்கீதா (யார் எடுத்ததுன்னு தெரியல!) தோழிகளுக்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தப் படம் செப்பனிடப் பட்டிருந்தால் முதல் பரிசுக்கு தகுதி உள்ளதாய் இருந்திருக்கும் என PIT நடுவர் குழு கருத்து தெரிவித்திருக்கிறது. இதை செப்பனிடாமல் அனுப்பி இரண்டாம் இடத்திற்கு இழுத்து வந்த சிறுமை அடியேனையே சாரும். (செப்பனிட வேண்டும் என்ற விஷயமே நடுவர் குழு சொன்ன பிறகு தான் புரிந்தது) அடுத்த முறை இவ்வாறு தவறுகள் நேரா வண்ணம் இயன்ற வரை பார்த்து கொள்கிறேன். 

எல்லோரும் கலந்து கொண்டு மகிழ்ந்த இந்த நிகழ்ச்சியில் வேலு, பிரசன்னா கலந்து கொள்ள முடியாமல் போனதும், கலந்து கொண்ட வைத்தி இந்த படத்தில் Out of frame இல் போனதும் வருத்தம் தரும் விஷயங்கள்.

வழக்கம் போல நண்பர் வெங்கடேசனுக்கு நன்றிகள்.

இது மாதிரி ஒரு சூழலை அமைத்து தந்ததற்காக சீனுவாசனுக்கும், எது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியாக குலாப் ஜாமூன் செய்து தந்து எங்களை அசத்திய சங்கீதா அக்காவிற்கும் (:P) எனது நன்றிகள். 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 கருத்துகள்:

angelin சொன்னது… [Reply]

Congrats

veedu சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள்...இரண்டாம் இடம் கிடைத்தாலும் நட்பில் முதல் இடத்தில் இருக்கின்றீர்கள் மேன்மேலும் சிறக்க இறைவனை பிராத்திக்கின்றேன்

பெயரில்லா சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள் நண்பரே...இன்னும் கலக்குங்கள்...

ஷைலஜா சொன்னது… [Reply]

congrats! அடுத்தமுறை முதலிடம் கிடைக்கும் வாழ்த்துகள்!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நட்பின் கூட்டத்தில்
எல்லோரையுமே
சேர்த்துக்கொள்ள ஆசை!

அடடா
சில உறவுகள்
உடைந்த சில்லுகளாய்
ஒட்ட வைக்க என்செய்வேன்?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது… [Reply]

வாழ்த்துகள் ...
இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.

ராஜா MVS சொன்னது… [Reply]

வாழ்த்துகள்... நண்பா...

ரசிகன் சொன்னது… [Reply]

@angelin
@veedu
@ரெவெரி
@ஷைலஜா
@"என் ராஜபாட்டை"- ராஜா
@ராஜா MVS

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே.

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
தவறானது சரியானதால்,
சரியானது தவறானது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

நண்பர்களின் சந்தோசத்தை பார்க்கும் போது எனக்கும் அந்த கால நினைவு வந்தது. பகிர்விற்கு நன்றி நண்பரே!

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

Bharath Computers சொன்னது… [Reply]

மொத்தமே 2 படம் தான் கலந்து கொண்டதா? :P
புனிதவதி அல்ல குணவதி. குணமிருந்தாலே புனிதம் தானே வந்துடும் போல.
ஸ்ரீதருமில்லை என்பதை சு(கு)ட்டிக் காட்டுகிறேன்.
விநாயகம் & குடும்பம், சிவா & குடும்பமும் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...