வியாழன், ஜனவரி 12, 2012

சுவாமி விவேகானந்தர்


மெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் (John D. Rockefeller). அமெரிக்காவின் மொத்த படிம எண்ணை (Fossil Fuel - Petrol, Diesel) வர்த்தகத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். பெரும் கோடீஸ்வரர்.  

அப்படிப்பட்ட மனிதர் மன உளைச்சலாலும், படபடப்பாலும், உறக்கமின்றி அவதிப் பட்டார். அவரிடம் அவரது நண்பர், தனக்கு தெரிந்த ஒரு சாமியார் இந்தியாவிலிருந்து வந்து இருப்பதாகவும் அவரிடம் போனால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என கூறி சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லரை அழைத்து போனார்.

சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லர் தனது பிரச்சினையை கூற, கேட்டுக் கொண்டவர், "உங்கள் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுங்கள். உங்கள் பிரச்சினை சரியாகும்" என அறிவுரை கூறினார். அதை கேட்டு, இப்படி சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் ராக்பெல்லர்.

ஆனால் விவேகானந்தரின் ஆளுமை மெல்ல மெல்ல அவரை சிந்தனையில் ஆழ்த்த, ராக்பெல்லர் தனது பணத்தை ஏழை எளியவர்களுக்காக செலவழித்தார். அவரே ஆச்சரியப்படும்படி தனது பிரச்சினையில் இருந்து அவர் மீண்டார்.

பின் விவேகானந்தரை சந்தித்த ராக்பெல்லர், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக தனக்கு நன்றி சொல்லும் படி விவேகானந்தரை கேட்டுக் கொண்டார். புன்னகைத்த படி விவேகானந்தர் சொன்னார், "நன்றி சொல்ல வேண்டியது நானல்ல". உண்மையை உணர்ந்த ராக்பெல்லர் விவேகானந்தரிடம் நன்றி கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சுமார் 55 கோடி டாலர் அளவிற்கு நன்கொடை அளித்தார். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ராக்பெல்லர் பவுண்டேஷனின் பணி பிரமிக்க தக்கது. இன்றும் அது தனது பணியை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

காலம் பல கோடீஸ்வரர்களை கடந்திருக்கிறது. ஆனால் ஒரு  கோடீஸ்வரரை கொடை வள்ளலாக சரித்திரத்தில் நிலைக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர். 

முனைவர் எஸ்.சந்திரா அவர்கள் எழுதிய "அறிஞர்கள் வாழ்வில்" என்ற புத்தகத்திலிருந்து - வெளியீடு : விகடன் பிரசுரம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 கருத்துகள்:

ADMIN சொன்னது… [Reply]

பகிர்வுக்கு நன்றி.!!!

பெயரில்லா சொன்னது… [Reply]

நல்ல புத்தகம்...நல்ல பகிர்வு நண்பரே...

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

இன்ரு விவேகானதரின் பிறந்ததினம். அன்று அவரின் நினைவுகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

siva சொன்னது… [Reply]

தேசிய இளைஞர் தினத்திற்கு வித்திட்ட (வீர இளைஞர்) சுவாமியை போற்றுவோம் தினமும்..

ஷைலஜா சொன்னது… [Reply]

விவேகாநந்தருக்கு அஞ்சலி செய்யும் விதமாய் பதிவுபோட நான் நினச்சேன் செய்யல நீங்க அழகா பதிவிட்டிருக்கீங்க ரசிகன்!

ரசிகன் சொன்னது… [Reply]

@தங்கம் பழனி வணக்கம் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி வணக்கம் நண்பரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi வணக்கம்மா. விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த பதிவை வெளியிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

ரசிகன் சொன்னது… [Reply]

@siva வாங்கண்ணா. முதல் முதலா கருத்து சொல்லி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா நீங்க பதிவிடணும்னு நெனச்சீங்களே, அதுவே அவருக்கு செய்த அஞ்சலி தானே அக்கா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நரேந்திரதத் யார்?என்றேன்
எங்கேயோ கேட்டது போல்
நினைவிருக்கிறது என்கிறாய்!

அடடா
உலகம் புகழ உயர்ந்த
ஒரு மாமனிதனை
பெயரைக்கூட மறந்தோமே!

Related Posts Plugin for WordPress, Blogger...