வியாழன், மார்ச் 17, 2011

பிளாஸ்டிக் பயன் படுத்துங்கள்...


டீ கப்பில் சூடாக 
டீ குடியுங்கள்.

ஹோட்டலில், 
டிபன் வாங்கும் போது 
வாழை இலையை தவிர்த்து 
பிளாஸ்டிக் பேப்பரில் 
கட்டிக் கொள்ளுங்கள்.

சாம்பாரும், சட்னியும்
வேறு தனி கவர்களில்...

பூ, பழம், காய்கறி, மளிகை 
என எந்த பொருள் வாங்கும் போதும் 
கேரி பேகில் வாங்க மறக்காதீர்கள்.

அப்போது தான் உங்களுக்கு
புற்றுநோய் இலவசம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

இலவசங்களுக்கு அடிமையாய் இருக்கோம்... விழிப்புணர்வுடன் இருந்தால் அடிமையாய் இருக்க மாட்டோம்..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நான் ஏன் நெகிழியை
பயன் படுத்துகிறேன் என்பதற்கு
ஆயிரம் காரணங்களை அடுக்கினேன்!

உண்மையிலேயே
நெகிழியை பயன்படுத்தாமல் இருக்க
ஒரு காரணம் கூட கிடைக்கவில்லையா?
எனக்கேட்டு நெகிழ வைத்துவிட்டாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...