ஞாயிறு, ஜூன் 26, 2011

Hr.பாஸ்கர்



ண்பர் ஜெயவசந்தன் அவர்கள் ஒருநாள் ஒரு DVD ஐ கொடுத்து "உங்கள்  நோய் எதுவானாலும் எந்த வைத்தியமும் இல்லாமலேயே சரியாகும். எந்த பத்தியமும் இல்லை. யோகா, உடற்பயிற்சி தேவை இல்லை. இதை பார்த்து  முடித்த சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சுமார் ஆறு மணி நேரம் இது ஓடும், செல்போனை அணைத்து வைத்து விட்டு பார்" என ஆவலை தூண்டினார்.  அதன்படி ஒருநாள் இரவு சுமார் 7 மணிக்கு பார்க்க ஆரம்பித்து நள்ளிரவு ஒரு மணிக்கு தான் முடிந்தது. (விடிந்தால் தமிழ் புத்தாண்டு - ஏப்ரல் 14).

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு" என்ற  வள்ளுவரின் இந்த மூன்று வார்த்தைகளுக்கு விளக்கம் அந்த ஆறு மணி நேர உரை. அந்த இரவிலேயே  அவர் சொன்ன படி செயல்பட துவங்கினேன்.  மிக சரியாக இரண்டாவது நாளில் எனக்கு தீரா தொந்தரவாக இருந்த செரிமான பிரச்சினை சரியாகிப் போனது. உடனே அவரை தொடர்பு கொண்டு எங்கள் ஊரில் நீங்கள் வந்து பேச வேண்டும் என நான் சார்ந்துள்ள அமைப்பு சார்பில் அழைப்பு விடுத்தேன். மலேசியாவில் நிகழ்ச்சி இருப்பதால் அங்கு போய் வந்ததும் விழுப்புரத்தில் நிகழ்ச்சியை வைத்து கொள்ளலாம் என ஜூன் 26 ம் தேதியை ஒதுக்கி தந்தார். எங்கெங்கு காணினும் பணம் என்ற இன்றைய சூழலில், "எவ்வளவு தர வேண்டும்?" என கேட்டதற்கு, "உங்கள் விருப்பம். இல்லை என்றாலும் பரவாயில்லை" என்றார். அதன்படி வந்தார். சிறப்பாக பேசினார். அவர் தம்பி திரு.சீனிவாசன் அவர்கள் எங்களோடு இரண்டு நாட்கள் இருந்து, நிகழ்ச்சி  சிறக்க  உதவி செய்தார்.

மேன்மக்கள் மேன்மக்களே!

 இந்த செவி வழி தொடு சிகிச்சை குறித்த மேலதிக விவரங்களுக்கு, http://anatomictherapy.org/

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

ஆம்! இந்த கூட்டம் பலருக்கு பேருதவியாக இருந்தது. ஏற்பாடு செய்த விடியல் விழிப்புணர்வு இயக்கத்திற்கும், இயக்க தோழர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

எப்போதுமே
நொறுக்கு தீனியாகவே
வாங்கி தரச் சொல்லி
தொந்தரவு செய்கிறாயே!

என்னவளே
நொறுங்க தின்றால்
நூறு வயது என்பதை
தவறாக புரிந்து கொண்டாயோ?

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

பாஸ்கர் அவர்களின் பேச்சுக்களை நானும் டௌன்லோட் செய்து வைத்திருக்கேன். எல்லாருக்குமே பயன்பெறும் சுலபமான முறைகளில் தெளிவாக விளக்கம் அளித்திருக்கார்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi அப்படியா! ரொம்ப சந்தோஷம் அம்மா. அடிக்கடி அவர் பேச்சை கேளுங்கள். புதிது புதிதாய் புரியும். முடிந்தவரை நண்பர்களுக்கு தந்து உதவுங்கள். ஏனெனில், ஆரோக்கியம் தானே அடிப்படை செல்வம்!!!

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

ஆமா ரசிகன் பாஸ்கரும் அதேதான் சொல்ராரு நிறைய பேருக்கு தெரியபடுதுங்க எல்லாரும் பயன் பெறட்டும்னுதான் சொல்ராரு. நல்ல விஷயம் நமக்குத்தெரிந்ததை நாலு பேர்கூட பகிர்ந்து கொள்ளலாம் தானே. நானும் டெய்லி அரைமணி நேரம் அவர் பேச்சைக்கேட்டுண்டு இருக்கேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...