ஞாயிறு, ஜூலை 03, 2011

புதிய தலைமுறை...

மது புதிய தலைமுறை பத்திரிக்கையின், கடந்த 23.06.2011 இதழின், நடுப் பக்கத்தில்

சோதிடம் பாருங்கள்.
எதிர்காலம் அறிய அல்ல...
கிளியின் சிறிதுநேர விடுதலைக்காக.

என ஒரு சுவரொட்டி இருந்தது. இந்த கருத்தோடு நான் முரண்பட்டதால், அதை மறுத்து புதிய தலைமுறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். எனது கருத்தையும் மதித்து இந்த இதழில் அதை வெளியிட்டிருக்கும் புதிய தலைமுறை இதழுக்கும், ஆசிரியருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
(புகைப்படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

கணினி சோதிடம்!
பார்ப்பதும்
பார்க்காததும்
அவரவர் விருப்பம்!

கிளிகள் மகிழ்ச்சியாக
இருக்கட்டும்!
சோதிடர்கள் பிழைப்பும்
நடக்கட்டும்!

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது… [Reply]

அழகிய சிந்தனை...

அடிமைப்படுத்துபவர்கள் இல்லையென்றால் அடிகைள் எது...

உங்களுக்கு வாழ்த்துக்கள்..
புதிய தலைமுறைக்கு நன்றிகள்..

VenSan சொன்னது… [Reply]

டேய் ..(என்னை பொறுத்த வரை மரியாதையின் உச்சம் ததும்பும் விளிப்பு இது..எண்ணங்களின் ஆச்சரிய மிகுதியில் மாச்சரியம் ஏதும் அற்றுப்போகும் ..)..

நேற்று வாங்கினேன் இந்த இதழை உன் அழைப்பிற்கிணங்க
நடுப்பக்கம் பார்த்தேன் .. ஏற்றமிகு எண்ணம் கொண்டவன் இந்த படைப்பாளன் என்று எண்ணி
மனதிற்குள் பாராட்டினேன் ..

மாலையில் உன் அழைப்பு
ப்ளாக் படிக்கச்சொல்லி ..

பின்பே தெரிந்து கொண்டேன் அந்த
ஏற்றமிகு படைப்பாளி என் நண்பன் என்று..

சொற்களில் சுருக்கமாய்
நற்சிந்தையின் பெருக்கமாய்
மனதிற்கு நெருக்கமாய்
கவிதை சொல்வதில்
நீ
வள்ளுவனின் வழி தோன்றல்

வாச அகம் உடைய வாசகன் நீ
எழுத்தை ஆளுமை செய்யும் எழுத்தாளன் நீ
நன் பண் செய்யும் நண்பன் நீ

எண்ணங்கள் தோன்ற தோன்றவே அவற்றை
இயலாமை புதைகுழியில் இட்டு
நாகரீக மண் கொண்டு மூடி
சொகுசு வாழ்வின் வால் பற்றி தொங்கும்
ஒரு "சாகச" பயணத்தை மேற்கொள்ளும்
என் போன்ற பதர்களுக்கு
ஒவ்வொரு சிறு எண்ணத்தையும்
அக்கினி குஞ்சென்று பொத்தி அணைத்து
வெம்மையில் கைகள் தீய்ந்து விடினும்
ஒரு விளக்கின் திரி முனையிலோ
ஒரு புரட்சி வெடியின் திரி முனையிலோ
அதை ஏந்தி சென்று ஏற்றி வைக்கும்
உன் போன்ற பக்தர்கள்
நண்பர்களாய் கிடைப்பது
அரிதினும் அரிதே..

உன்னிடமிருந்து
சற்று ஒளி கடன் வாங்கி
நானும் சில விளக்குகள் ஏற்றிட விரும்புகிறேன்..

மாயைகளின் அகோர பிடியில்
சிக்கி துரு ஏறிப்போயிருக்கும் என் இரும்பு
இதயம் கொஞ்சம்
இளகியது போல் தோன்றுகிறது..

வாழ்க வளமுடன்

shanevel சொன்னது… [Reply]

யாருக்கும் தோன்றிடாத கருத்துக்களை முன்வைத்து அதையும் உடனடியாக திருத்தி வெளியிட்ட புதிய தலைமுறை இதழுக்கு, உடனே நன்றி தெரிவித்தும், மகிழ்ச்சியில் இதனை வலைத்தளத்தில் வெளியிட்டதும் பாராட்டுகின்றேன்... இது போல சிந்தனைக்குரியதை நம் சமூகத்திற்கு இன்னும் நிறைய எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்...!

chandru சொன்னது… [Reply]

"நம்பிக்கை விற்பவன்"
மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாத இடத்தில்
தன் சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,

பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,

"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,

தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:

"உன் பெருமை உனக்குப் புரியலை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"

நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.

இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;

உனக்கு சாப்பாடு போடுவதில்
சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"

வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிளிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:

"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!" http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8383044&tid=5318321190944288480&kw=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF&na=3&nst=83&nid=8383044-5318321190944288480-5343993739480837856

ரசிகன் சொன்னது… [Reply]

@chandru கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா.

Related Posts Plugin for WordPress, Blogger...