திங்கள், நவம்பர் 28, 2011

கண்ணீர் அஞ்சலி...


லை கலைந்து
கன்னம் ஒட்டி
கண்கள் குழி விழுந்து
புடவை கசங்கிய  
ஒரு பாட்டி இருக்கிறார்
கண்ணீர் அஞ்சலி 
சுவரொட்டியில்.

இருக்கும் போது
சோறு போட்டிருக்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 கருத்துகள்:

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

இருக்கும்போது சோறு போட்டிருந்தால் அந்தமுகத்தில் புன்னகையை பார்த்திருக்கலாமே?

radhakrishnan சொன்னது… [Reply]

உண்மையான கருத்து.பாட்டியின்
படத்திற்குக் கீழே பிள்ளைகள், பேரப்
பிள்ளைகள் பெயர்கள் பெரிய எழுத்துக்களில் இருக்குமே.விளம்பரத்திற்கு ஒரு நல்ல
வாய்ப்பு.

SURYAJEEVA சொன்னது… [Reply]

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்பதே இப்பொழுது சுய விளம்பர இடமாகி விட்டது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

சாட்டையடி...


இறந்தப்பின் பால் ஊற்றுவோம்
உயிர் பிழைக்க அதை செயய் மாட்டோம்..

என்ன உலகம்...

பெயரில்லா சொன்னது… [Reply]

இன்றைய நிலை அதுதானே...

நல்லாயிருக்கு...

Thulir சொன்னது… [Reply]

சின்ன வரிகளில்
சிறப்பான செய்தி
வாழ்த்துக்கள்

VenSan சொன்னது… [Reply]

இருக்கும்போது சோறு போட்டிருந்தால்
சொத்து கிடைக்க தாமதமாகுமே?
மனசால் கொன்றுவிட்டு
வெறும் ஜடமாய் இருந்த ஒரு
கூட்டின் மரணத்தை
பறை சாற்றும் சுவரொட்டிகள்

ஒட்டிய கைகளெல்லாம் ரத்தம்
சுவரெல்லாம் பிண வாசம்
அறிவிப்பில் இடம் பெரும் பெயர்களெல்லாம்
பணத்தை தின்ன துடிக்கும் எதிர்கால பிணங்கள்

சுவரொட்டி ஒட்டி விட்டு சொத்து சண்டை முடிந்து
கிடைத்த பணத்தில் அவர்கள் உண்ணப் போவதெல்லாம்
ஒரு மூதாட்டியின் ரத்தம் தோய்ந்த சவ ரொட்டிகள்

நல்ல பதிவு
மனத்தின் வலிகளை உமிழ
ஒரு இடம் கொடுக்கும் பதிவு
நன்றிகள் நண்பனே

ராஜா MVS சொன்னது… [Reply]

சுளீர் என சுடும் பலரை...

ஷர்புதீன் சொன்னது… [Reply]

அட நீங்களும் ரசிகனா ?!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எதிரே இருப்பவர் புன்னகைத்தால்
புன்னகைதானே வர வேண்டும்
இப்படி அழுகை வருகிறதே!

அடடா
புன்னகை முகம் மாறாமல்
தம்பியின் புத்தாண்டு புகைப்படம்
தோற்றம் மறைவை தாங்கியபடி!

ஷைலஜா சொன்னது… [Reply]

கவிதை சாட்டையடி

ஷைலஜா சொன்னது… [Reply]

இன்றைய என் காமெடிபதிவில் உங்கள புகுத்திட்டேன் ரசிகன்:)

போளூர் தயாநிதி சொன்னது… [Reply]

வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அருமையான பதிவு... நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

Bharath Computers சொன்னது… [Reply]

நல்லா பாருப்பா,
அது இறந்த பின்
எடுத்த புகைப்படமாய்
இருக்கபோகிறது? :P

ரசிகன் சொன்னது… [Reply]

@Lakshmi
@radhakrishnan
@suryajeeva
@கவிதை வீதி... // சௌந்தர் //
@ரெவெரி
@ராஜா MVS
@ஷைலஜா
@திண்டுக்கல் தனபாலன்

நன்றி நண்பர்களே! வருகைக்கும், கருத்துக்கும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@Thulir
@போளூர் தயாநிதி

வருக நண்பர்களே! முதல் முறை வந்திருக்கிறீர்கள். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷர்புதீன்
ஐ!!! நீங்களுமா!!!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு :(

ரசிகன் சொன்னது… [Reply]

@VenSan
@Bharath Computers
மிக சரி. உயிர் இருப்பதாலேயே வாழ்வதாக அர்த்தமாகாது.

Unknown சொன்னது… [Reply]

உண்மைதான் இருக்கும் போது டீ கூட வாங்கி கொடுத்து இருக்கமாட்டார்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...