புதன், ஜனவரி 26, 2011

அல்வா மட்டுமல்ல...இன்னும் பனிப் போர்வை 
விலக்காத சோம்பல் பூமி,

சுட்டெரிக்காமல் செல்லமாய் 
எட்டிப் பார்க்கும் சூரியன்,

கைக்கு எட்டும் தூரத்தில் 
RIN வெண்மை (:p) கொக்கு,

மனைப்பிரிவுகளாகி 
மலடாக்கப் படாத 
பசுமை படர்ந்த நிலம்,

கரையோடு கதை பேசும் 
தண்ணீர் ஓடும் நதி!!!

செல்போன் இல்லாத மனிதர்கள்,

தாவணிப் பெண்கள்,

நெல்லையில் வாழ்க்கை இன்னும் 
இனித்துக் கொண்டு தான் இருக்கிறது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

பழய நினைவுகள் எப்பவும், இப்பவும் அருமையானது.... இனிமையான தருணங்கள் நிறையவே நினைவிலாடுவதால்... பழசு எப்பவும் இனிக்கும்...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
மொட்டை போட்டால்
அழகிய குல்லாய் என்று
ஆசை காட்டினாய்!

போட்ட பின்
திருநெல்வேலிக்கே அல்வா
திருப்பதிக்கே லட்டு மாதிரி
குல்லாவுக்கே குல்லா என்கிறாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...