வியாழன், ஏப்ரல் 21, 2011

வரம் தந்த சாமி...


1985 ஆம்ஆண்டு வெளியான சிப்பிக்குள்முத்து  திரைப்படத்தில் வைரமுத்து அவர்களால் எழுதப் பட்டு, இளையராஜா அவர்களால் இசை அமைக்கப் பட்டு  பி.சுசீலா அவர்கள் பாடிய என்னை கவர்ந்த பாடல்...
 


 


லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு...
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ 
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
கருயானை முகனுக்கு...
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிரோ... ஆரிராரிரோ... 
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ
 
 
இந்த படம் வெளியான ஆண்டு 1985. இந்த பாடல் அதற்கும் 40 ஆண்டுகள் முன்பு  நடப்பதாக கதையில் வரும். அப்படியானால் இந்த பாடல் பாடப்படும் காலம் சுமாராக 1945 ஆம் ஆண்டு. அந்த காலத்தில் பெண் அடிமைத்தனம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பிள்ளை பெறாதவள் மலடி என்று இழிவு படுத்தப் பட்டாள். ஒரு மலடிக்கு எந்த ஒரு சமுதாய நிகழ்விலும் மரியாதை கிடைத்ததில்லை. அப்படி ஒரு இன்னலுக்கு தன்னை ஆளாக்காமல் தனக்கு தாய்மை என்ற வரம் தந்த சாமிக்கு - குழந்தைக்கு பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.


தன் பிள்ளை எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற அவளது ஆர்வம் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. ராமன், கண்ணன், பிள்ளையார், முருகன் போல தன் மகன் உலகம் போற்றும் உத்தமனாக வருவான் என்கிறாள். அப்படி பட்ட என் பிள்ளையின் புகழ் பாடுபவளாக -  கம்பன், வால்மீகி, தியாகய்யராக தான் இருப்பேன் என்கிறாள்.
 

இங்கு ஒரு சிறு விஷயம் - கவிஞ்னின் சொல்லாடல் - கவனிக்க வேண்டும். யானை காடுகளில் மலைகளில் இருக்கும். அதனால் யானை முகனுக்கு மலை அன்னை [பார்வதி], உலகம் புகழும் (பார் போற்றும்) முருகனுக்கு பார்வதி [பார்+வதி - மலை அன்னை]


இனிய இசையோடும், இழைந்தோடும் குரலோடும்... அற்புதமான பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆனந்தம் அடைவீர்கள்.


[என்ன செய்தும் இந்த இடுகையை ஒழுங்காக அமைக்க முடியவில்லை. மன்னிக்கவும். இதை சரியாக்கும் யோசனை ஏதேனும் தெரிந்தால் சொல்லவும்.]
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

வரம் தந்த சாமிகளை அடையாளம் கண்ட உங்களுக்கு லாலி!... மனசு ரொம்ப பாட்டுல மயங்கிடுச்சு பா உங்களுக்கு...! அப்படித்தான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டா சரியா எழுத்துல வடிக்க முடியாம போய்டும்..! குற்றாலம் உல்லாச பயணம் என்னாயிற்று?

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
குழந்தைகள் என்றால்
கொள்ளை பிரியம் என்று
உண்மையைத்தான் சொன்னேன்!

ஏய் படவா!
சுற்றி வளைத்து
எங்கு வருவாயென
எனக்கு தெரியும் என்கிறாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...