வெள்ளி, ஏப்ரல் 22, 2011

நானே நானா...
சாலையின் நடுவிலிருந்து,
லாரிக்கு பயந்து இடப்புறமும்,
பஸ்க்கு பயந்து வலப்புறமும்,
மிரண்ட விழிகளோடு 
அலை பாய்ந்து கொண்டிருக்கும் நாய்,
நினைவு படுத்துகிறது
டிரேடிங்கின் போது என் நிலையை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

பங்கு சந்தை சாலையில்
நாள் முழுக்க பரிதவித்து
அலைபாய்ந்து
குற்றுயிரும்
குலையியுருமாய்
மீண்டு வந்து
பண்டமாற்று சந்தை எனும்
தண்டவாளத்தில் தலை வைத்து
இரவு வரை
ஓய்வெடுக்க நினைக்கும்
நண்பனுக்கு
அயல்நாட்டு கப்பலின்
அடித்தள கரியறையில்
அடிமை வேலை பார்க்கும்
இந்த இயலாமை நிறைந்த
நெஞ்சத்தின்
அனுதாபங்கள்

shanevel சொன்னது… [Reply]

இதுக்குத்தான் ட்ரேடிங் லாம் பண்ணாத ன்னு எனக்கு ஓடிவந்து சொல்வியே டா நீ...! ஹா ஹா...! அதெல்லாம் எனக்கு மட்டுமா டா?!!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

அடியே
மும்பை பங்கு சந்தை பற்றி
பல்வேறு சந்தேகங்களை
என்னிடமா கேட்டு தொலைப்பாய்?

எதோ
ஒரு மடப்பட்டு சந்தை
அண்டராயநல்லூர் சந்தை
இது பற்றியெல்லாம் கேளேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...