வெள்ளி, மே 20, 2011

நான் மலரோடு தனியாக...


"னக்காக நான் இங்க காத்துகிட்டிருக்கேன். நீ எங்க போயிட்டு வர்ற? ஏன் இவ்ளோ நேரம்? ஏன் உன் தலையெல்லாம் கலைஞ்சிருக்கு?" என்று ஆரம்பித்து வாய்க்கு வந்ததெல்லாம் ஒருவன் கேட்டால் சம்பந்தப் பட்ட பெண் எப்படி உணர்வாள்? அவளுக்கு கோபம் வருமா வராதா? இப்படி சண்டை போடுபவர்களை பார்த்தால் "ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள்?" என  நாம் நினைப்போமா இல்லையா? ஆனால் இப்படி ஒரு சண்டையை நாம் இன்றும் ரசிக்கும் படி ஒரு சிறந்த பாடலாக தந்திருக்கிறார்கள், பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும், இயக்குனரும். இரு வல்லவர்கள் (1966) படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரு. வேதா அவர்கள் இசை அமைத்த நான் மலரோடு தனியாக... என்ற எல்லோருக்கும் பிடித்த பாடல்...


ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்



ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



ஆண்: நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?



பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்



ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பெண்: பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்



ஆண்: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்





[ஒரு சிறு விளக்கம் சொல்லலாம் என நினைக்கிறேன். திரையில் தோன்றும் நாயகன், நாயகியை மறந்து விடுங்கள். அவர்களை குறித்த நமது முன் முடிவு, விளக்கத்தை ஏற்க விடாமல் செய்யலாம்.

இந்த பாடலில் வரும் பெண் ஏதோ ஒரு வகையில் (பெரும்பாலும் அழகு) ஆணை விட உயர்ந்தவள். இவள் தனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்பதாக ஆண் கருதுகிறான். அதனால் தான் அவளை இவன் மகராணி என்கிறான். (ஆனால் அவள் எந்த இடத்திலும் அவனை தன அரசனாக சொல்லவில்லை!) இவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என அவன் அஞ்சுகிறான். இந்த அச்சம், நம்பிக்கை இன்மை சந்தேகமாக வெளிப்படுகிறது. அதனால் தான் மனதில் பட்டதையெல்லாம் அவளிடம் கேட்கிறான்.

அவளும் அவன் அஞ்சுவதற்கு தகுந்தார் போலவே, இவனை சமாதானப் படுத்த அவனுக்கு பிடித்ததாக பேசுகிறாள். (உன் இளமைக்குத் துணை ஆவதற்காக தனியாக வந்தேன்) வண்டு முகத்தில் மோதி அதை தள்ளியதாலேயே தன் தலை கலைந்ததாக கூறுகிறாள்.

எனவே இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்தது காதலே அல்ல என நான் கருதுகிறேன். (மாற்று கருத்துக்களை வரவேற்கிறேன்)]

இந்த பாடலை வேறொரு விதமாகவும் சிந்திக்கலாம். பெண்ணை மலருக்கு ஒப்பாக கவிதைகள் கூறுகிறதே.. அது நிஜமானால் எப்படி இருக்கும் என்ற கவிஞரின் கற்பனையாகவும் இந்த பாடலை கொள்ளலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

அடியே
கைகள் சிவக்க சிவக்க
இப்படியா வேலை செய்வதென
கடிந்து கொள்கிறேன்!

என்னவோ
நிஜமாகவே காப்பு காய்த்தது போல்
கவலையோடு காட்டுகிறாய்
பீட்ரூட் துருவிய விரல்களை!

Related Posts Plugin for WordPress, Blogger...