வியாழன், டிசம்பர் 01, 2011

நல்ல நல்ல பிள்ளைகள்...



நண்பர் கோபிநாத் அவர்களின் அழைப்பின் பேரில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். LKG முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 120 குழந்தைகள் கலந்து கொண்டு கலக்கிய அந்த நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்.

விருந்தினர்களின் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை போன்ற பொதுவான சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு தொடங்கியது, குழந்தைகளின் குதுகலம். தனது பாதுகாப்புக்காக உடன் வந்திருந்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றோரின் கைகளை விடுவித்துக் கொண்டு உற்சாக வெள்ளத்தில் விளையாட தொடங்கினர் குழந்தைகள்.

வார்த்தை விளையாட்டு, பாட்டுக்கு பாட்டு, குழு நடனம் போன்ற குழு விளையாட்டுகளில் மட்டுமல்லாமல்; பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் கலக்கினார்கள் குழந்தைகள்.

குழந்தைகளின் செய்கைகளுக்கு கை தட்டி, உற்சாகப் படுத்தி பாராட்டிக் கொண்டிருந்ததால் எளிதில் எங்களுடன் ஒட்டிக் கொண்டனர்.

"அம்மா இங்கே வா வா..." பாடிய மூன்று வயது சிந்து, "Twinkle, Twinkle little star..." பாடிய செல்வகுமார், காமராஜர் குறித்து பாடிய சரஸ்வதி, கொடி காத்த குமரன் பற்றி உணர்வுரை ஆற்றிய பிரான்சிஸ், அற்புதமாக நடனம் ஆடிய அர்ச்சனா, "Why this கொல வெறி..." பாடிய ஆல்பர்ட் கவனம் கவர்ந்தார்கள். பரிசும் பெற்றார்கள்.

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி.
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்,
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...

என நிஷா பாடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. ஆம் நண்பர்களே, நிஷா உட்பட அங்கிருந்த குழந்தைகள் அத்தனை பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். யாரோ செய்த தவறுக்கு சிலுவை சுமப்பவர்கள். இதில் பலர் அன்னையும் தந்தையும் இல்லாதவர்கள். அரசாலும், தொண்டு நிறுவனங்களின் தயவாலும் உயிர் வாழ்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் உற்சாகமும், சந்தோஷமும் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது. நிச்சயம் இந்த வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கப்படும் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் அர்ச்சனாவின் நம்பிக்கைக்கு முன் நான் மண்டியிட்டேன். 

இந்த இடுகை எய்ட்ஸ் குறித்த மக்களின் பொதுவான அருவருப்பான பார்வையிலிருந்து யாரோ ஒருவரின் பார்வையை மாற்றுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.

குறிப்பு: இன்று உலக எய்ட்ஸ் தினம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

17 கருத்துகள்:

ஷைலஜா சொன்னது… [Reply]

துக்கம் உங்களுக்கு மட்டுமா ரசிகன் பதிவைப்படிச்சதும் எனக்கும்தான்...வேதனையாய் இருக்கிறது பாவம் அந்தக்குழந்தைகள்.
அருவருப்பென்ன இந்தவியாதிகண்டவரிடம் இரக்கம் கொள்ளாதவர்கள்தான் அரக்கர்கள்.அவர்களில் யாராவது ஒருவர் இந்தப்பதிவைப்படிச்சா கண்டிப்பா மனம் திருந்துவாங்க.

ரசிகன் சொன்னது… [Reply]

@ஷைலஜா
ரொம்ப நன்றி அக்கா. பாரம் பகிர்ந்து கொண்டதற்கு.

பெயரில்லா சொன்னது… [Reply]

அன்று கீமோவுக்கு காத்திருந்த சின்னஞ்சிறுசுகளை பார்த்த உடன் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற எண்ணம் வந்தது...

இன்றுங்களுக்கு...

வேதனை தான்....

சம்பத்குமார் சொன்னது… [Reply]

வணக்கம் நண்பரே..

பெற்றோர்கள் செய்த தவறுகளுக்கு பலிகடா ஆக்கப்படும் குழந்தைகள்..

படித்தவுடன் அவர்களின் சந்தோஷத்தை உணர முடிந்த அதே வேளையில் அவர்களுள் உள்ள சோகம் மனம் கணக்க வைக்கிறது

VenSan சொன்னது… [Reply]

மனம் கனக்கிறது நண்பரே
மரணம் குறித்தோ
அதற்குப்பின்னான வாழ்க்கை(?)
குறித்தோ நமது சிற்றறிவிற்கு எட்டுவது
ஏதுமில்லை..கட உபநிஷதம்
படித்தும் கூட கடந்து போக முடிவதில்லை
வாழ்க்கையின் மீதான பிடிப்பையும்
சின்ன சின்ன அற்ப சந்தோஷங்களையும்..
இந்த பொருள் உலகம் மட்டுமே
எல்லை என தெரிந்த நமக்கு
இந்த சின்னஞ்சிறு உயிர்களின்
சந்தோசம் எத்தனை நாட்களோ
என்ற எண்ணத்தில் மனம் கனப்பது
உண்மைதான்..
ஏதோ ஒரு காரணம் கொண்டு தான் இந்த குழந்தைகள் இப்படி
படைக்கப்பட்டுள்ளனர் என்று ஆத்திக மனது
ஆறுதல் சொல்ல
என்ன கொடுமை இது
இவர்களை பெற்றவர்களுக்கு ஏன் இந்த புத்தி
இந்த சமுதாயம் ஏன் இப்படி
கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா என
நாத்திக மூளை கூச்சல் போட
..
இயலாமை ஒன்றுதான் இயல்பாகிறது இங்கு..

எய்ட்ஸ் தினத்தைக் கொண்டாடவா முடியும்?

மாறாக எய்ட்ஸ் கிருமி தாக்கிய
மழலைகளையும்
சிறுவர் சிறுமிகளையும்
சந்தித்து
அவர்களைக் கொண்டாடிய
நண்பரின் உள்ளம்
வாழ்க பல்லாண்டு
வளத்தோடும்
நலத்தோடும்

A.R.ராஜகோபாலன் சொன்னது… [Reply]

நிச்சயம் மாற்றும் நண்பரே, உங்களிம் மனித அபிமானம் நெகிழச் செய்தது.

ராஜா MVS சொன்னது… [Reply]

மிகவும் வேதனையான அனுபவம்...
எதற்காக இந்த வேதனையை சுமக்கிறோம் என்ற தெரியாமல் வாடும் மலர்கள்...

SURYAJEEVA சொன்னது… [Reply]

யாரோ ஒரு சிலரின் சுயநலத்தால் எத்தனை நபர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை மட்டும் இன்னும் இருளில்

கோகுல் சொன்னது… [Reply]

அர்ச்சனா வின் நம்பிக்கைக்கு முன் நானும் மண்டியிடுகிறேன்.

குதூகலமாகத்தான் பதிவை வாசிக்க ஆரம்பித்தேன்.முடிக்கையில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நானும் உணர்ந்தேன்.

குறையொன்றுமில்லை. சொன்னது… [Reply]

பெற்றோர்கள் செய்த தவறுகளுக்கு பலிகடா ஆக்கப்படும் குழந்தைகள்..

ஆனாலும் இது ரொம்ப அனியாயம்

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
கல்யாணத்துக்கு முன்
கட்டாய எச்.ஐ.வி சோதனை
சந்தேகப்படுவதாகாதா?என்றேன்

அடடா
அது சந்தேகமில்லை
அடுத்த தலைமுறை
மீதான அக்கறை! என்கிறாய்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

யாரோ செய்த தவறுகளுக்கு தற்ப்போது தண்டனை அனுபவிக்கும் குழந்தைகள்...

சங்கடமாக இருக்கிறது..

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

தங்களுக்கு என்மனமார்ந்த நன்றி..!

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி
உண்மை தான். முன்வினை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

ரசிகன் சொன்னது… [Reply]

@சம்பத் குமார்
@VenSan
@A.R.ராஜகோபாலன்
@ராஜா MVS
@suryajeeva
@கோகுல்
@Lakshmi
@சீனுவாசன்.கு
@கவிதை வீதி... // சௌந்தர் //
எல்லோருக்குள்ளும் வேதனை இருப்பதை உணர்கிறேன். இது வருத்தமான, மாற்றப் பட வேண்டிய விஷயம். முடிந்தவரை முயற்சிப்போம். தோள் கொடுத்ததற்கு நன்றி தோழர்களே.

Bharath Computers சொன்னது… [Reply]

பெற்றவர்கள் செய்யும் பாவம், பிள்ளைகளுக்கு தண்டனை என்பது சரியாக தான் 'இருக்'கிறது.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது… [Reply]

யாரோ செய்த தவறுக்கு
சிலுவை சுமப்பவர்கள் என்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பா..

சிந்திக்கவேண்டிய வரிகள்!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Related Posts Plugin for WordPress, Blogger...