வியாழன், பிப்ரவரி 03, 2011

சாமி அறை...



வாஸ்து படி (!) சாமி அறையை 
அலமாரியிலிருந்து இடம்
மாற்றினார் அப்பா.

காலியான இடத்தில்
புத்தகங்கள் வைக்கப்பட்டதில் 
சாமி அறையாகவே இருக்கிறது அலமாரி.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

அவ்வப்போது வாங்கி
அழகாக அடுக்கி
கற்பூரம் சாம்பிராணி ஏற்றி
மலர் தூவி
குங்குமம என்றும் அழைக்கப்படும் சிவப்பு வேதி பொடியையும்
சந்தனம் என்று பெயரில் மட்டுமே அறியப்படும் பிறிதொரு வேதி பொடியையும்
கலந்து இட்டு
விருந்தினர் கண்களில் படும்படி வைக்கப்படுவதாலும்
( ச்சே..எவ்ளோ பெரிய படிப்பாளி (பக்திமான்))
எப்போதாவது தூசி தட்டி
திருப்பி வைக்கப்படுவதாலும்
உள்ளில் இருப்பது யாதென்றறியாமல்
புறம் கண்டு மட்டுமே போற்றப்(!)படுவதாலும்
விழுப்புரம் கொண்ட சிலேடைக்கவி
சொன்னது போல்
பல வீடுகளில்
இரண்டு சாமி அறைகள் உண்டென்பதே உண்மை..
ஆறு என நாம் அழைக்கும் மணல் வெளிகளை (அதுவும் களவாடப்பட்டு வெறும் மலட்டு வெளிகளாய் மாற்றப்படுகின்றன) போல்
இவை
"சாமி இல்லா சாமி அறைகள்"

shanevel சொன்னது… [Reply]

எப்படியோ "சாமி"யார் னு பேரு எடுப்பது முடிவு செய்துட்டா... இன்னும் அதிரடி லாம் வரும் போல..! வெறும் கற்பூரம் மட்டும் காட்டி ஆராதிக்காமல், "சாமி"(புத்தகங்களை)களை... படித்து உணர்ந்தால், பேரானந்தம்(இதற்கும் உங்க வலைப்பூ தலைப்பூக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை..!)

K சொன்னது… [Reply]

ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் ..............

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உலகத்தின் வெளிச்சத்தை
வீட்டுக்குள் கொண்டுவருகிறது
ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்!

அடடா
இருட்டிலும் கூட உலகத்தை
மிகப்பிரகாசமாக்குகின்றன
மெழுகுவர்த்தியும் புத்தகங்களும்!

Related Posts Plugin for WordPress, Blogger...