புதன், மார்ச் 30, 2011

கடவுளும் மனிதனும்...




சுற்றி வளைக்கப்பட்டு, எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, இறந்து கிடக்கும் மகன் அபிமன்யுவை பார்த்து கதறி அழுகிறான் அர்ஜுனன். சோகமான சூழலில் எல்லோரும் இருக்க, கூடவே கண்ணனும் அழுகிறான். கண்ணனே அழுவதை கண்டு உடன் இருந்த ஒருவர், "உனக்கு உன் மருமகன் (தங்கை மகன்) மீது அவ்வளவு பாசமா? இப்படி அழுகிறாயே!" என கண்ணனை பார்த்து கேட்டாராம். அதற்கு கண்ணன், "இப்படி அழுகிறான். இவனுக்கு போய் கீதை உபதேசித்தேனே!?" என்றாராம்.

திரு.நெல்லை சுப்பிரமணியன் அவர்கள், கோவிலில் பேசிய உரையிலிருந்து...




கருத்து: 

கண்ணன் இறைவன். கீதை கடவுளால் மனிதனுக்கு சொல்லப்பட்டது. உலகின் இன்ப துன்பங்களால் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக சொல்லப்பட்டது. ஆனால் அர்ஜுனன் மனிதன். இன்ப துன்பங்களின் பாதிப்பு உள்ளவன். அதனால் அழுகிறான். [ஞானி ஆனாலும் முள் குத்தினால் வலிக்கும் - வேதாத்திரி மகரிஷி]  இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், தன மகன் எப்படியெல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பு பொய்த்து போன சோகத்தில் அர்ஜுனன் அழுகிறான். கடவுள் நிலைக்கு மனிதனை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தோல்வி அடைந்ததால் கண்ணன் அழுகிறான். ஆக கடவுள், கடவுளின் நிலையில் இல்லை. அவனும் இன்ப துன்பங்களால் பாதிக்க பட்டிருக்கிறான்.

ஒருவேளை இந்த கதையே கற்பனையாக கூட இருக்கலாம். என்றாலும் கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தது நிஜம். சிந்தனையை கிளறியது உண்மை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

அகம் ப்ரம்ஹாஸ்மி! :) கடவுள் என்ற அற்புத நிலையெல்லாம் வேணாம்... சக மனிதரை அன்பு செய்ய விரும்புவோம்... மனிதனாக வாழ்வோம் எளிமையாய்..! என்றாவது ஒரு நாள் நாம் எவரோ ஒருவருக்கு கடவுளாய் தெரிவோம்..!

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
நம்மிடம் எது இல்லையோ
அதை பெறவே கடவுள்
வேண்டும் என்றேன்!

நீயோ
நம்மிடம் எது இருக்கிறதோ
அதை கொடுத்தால் கடவுளாகவே
ஆகலாம் என்கிறாய்!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
அற்புதம்.

Related Posts Plugin for WordPress, Blogger...